viyapu.com RSS Feeds - Latest News

அந்த மூட் வரலையா? கட்டாயம் இதைப் படிங்கப்பா!
அந்த மூட் வரலையா? கட்டாயம் இதைப் படிங்கப்பா!

தீர்மாணிக்கின்றன. ஒரு சிலருக்கு வீட்டில் உள்ள பொருட்கள் கொஞ்சம் மாறுதலாக தெரிந்தாலும் கூட மூடு சரியில்லாமல் போய்விடும். அதன்பின் உறங்கும் வரைக்கும் அதே நிலையோடு இருக்க நேரிடும், பிறர்மேல் எரிச்சலும் நம்மைத்தவிர எதுவும் சரியில்லாதது போல தோன்றும் அப்புறம் எப்படி படுக்கை அறையில் சந்தோசமாக இருக்கமுடியும்.

இதோ நமது மனநிலையை மாற்றும் காரணிகள் எவை எவை என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். அவற்றை சரி செய்தாலே போதும் ரொமான்ஸ் மூடு உங்களுக்கு தானாக வரும்.

சரியில்லாத உணவு

நமது மனநிலையை தீர்மானிப்பதில் உணவு பெரும் பங்கு வகிக்கிறது. சரியில்லாத உணவை சாப்பிட்டால் அடி வயிறு வலிக்கும். இதனால் மூடு அப்செட் ஆகிவிடும். சில உணவுகளை சாப்பிட்டால் பதற்றம் ஏற்படும், சில உணவுகள் நரம்பு தளர்ச்சி, ஈடுபாடின்மை போன்றவைகளை ஏற்படுத்திவிடும் எனவே தினசரி படுக்கைக்குச் செல்லும் முன் நல்ல, அமைதியான மனநிலையை தரும் உணவுகளை உண்ண வேண்டும். பால் பொருட்கள் நல்ல மனநிலையை ஏற்படுத்தக்கூடியவை என்கின்றனர் நிபுணர்கள்.

வீட்டு உள் அலங்காரம்

மனதை புத்துணர்ச்சி ஏற்படுத்தி நல்ல மூடுக்கு கொண்டு வருவதில் நமது வீட்டில் உள்ள உள் அலங்காரப் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. மஞ்சள் நிறம் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். ஊதா நிறம் மனதிற்கு அமைதியை தரும். எனவே படுக்கை அறை சுவர்களில் மனதிற்கு இதமான வர்ணங்களை பூசுங்கள். அழகான இயற்கை ஓவியங்களை மாட்டுங்கள் அதுவும் உங்களுக்கு ரொமான்ஸ் மூடு வரவைக்கும். அலுவலக மன அழுத்தம், உளைச்சல் எதுவும் இன்றி மனதை இதமாக்கும்.

பதவி உயர்வு

அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பதவி உயர்வு பெற்ற பணியாளர்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்துள்ளது. பணி புரியும் ஊழியர்களிடையே பதவி உயர்வு என்பது அவர்களின் மனநிலையை தீர்மானிக்கும் விசயமாக இருக்கின்றது. நமக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை வேறு யாராவது தட்டிப்பறித்தாலும் நமக்கு மூடு அப்செட் ஆகிவிடும். அந்த மனநிலை குடும்பத்திலும் எதிரொலிக்கும்.

பணிப் பளு அதிகரிப்பு

ஒரு சிலருக்கு விடிய விடிய வேலை இருக்கும். எப்படா வீட்டில் போய் படுத்து தூங்குவோம் என்ற மனநிலையில் இருப்பார்கள். அந்த நேரத்தில் ரொமான்ஸ் மூடாவது ஒன்றாவது. இந்த சிக்கல்களில் இருந்து தவிர்க்க நமது பணியை பிரித்து நமக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மன அழுத்தமும், குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வெறுப்புமே ஏற்படும்.

ஊட்டச்சத்து குறைபாடு

உடலில் சத்து குறைபாடு ஏற்பட்டால் மன அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே வைட்டமின் டி, பி வைட்டமின்களான பி6, பி12 போலேட், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மன அழுத்தம் உடல் பாதிப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கும். அப்புறம் என்ன ரொமான்ஸ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்பீர்கள்.

நண்பர்கள்

நம்ம மனநிலையை தீர்மானிப்பதில் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நண்பேண்டா என்று நட்பு வட்டாரத்தை கொண்டாடுபவர்கள் நண்பர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இப்பொழுது பேஸ் புக் நட்பு கூட சில சமயங்களில் நமது மூடு ஸ்பாயில் ஆக காரணமாகிறது. எனவே எதுவுமே ஒரு அளவிற்கு மேல் நம்மை பாதிக்க விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மாத்திரைகள்

உடல் நல பாதிப்பிற்காக போடப்படும் மாத்திரைகள், அதேபோல் பெண்கள் குழந்தை பிறப்பை தடுப்பதற்காக போடப்படும் மாத்திரைகள் ரொமான்ஸ் மூடினை வடிந்து போக செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கான மாற்று வழியை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புகைப்பதும் நமது மனநிலையை மாற்றும் முக்கிய காரணியாக உள்ளது இதனால் புற்றுநோய், இதயநோய் போன்றவைகளும், மனஅழுத்தமும் ஏற்படுகின்றன. எனவே நல்ல மனநிலை ஏற்பட சிகரெட் பிடிப்பதை தவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பெட்ரூம் லைட்

படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் லைட் கூட நம் மனநிலையை மாற்றுமாம். அதேபோல் உறங்கும் முன்பாக அதிக நேரம் டிவி பார்ப்பது, நமது உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தி ரொமான்ஸ் மனநிலையை பாதிக்கச் செய்கின்றது. எனவே மனநிலையை பாதிக்கும் இந்த காரணிகளை சரியாக கையாண்டால் ரொமான்ஸ் மூடு ஏற்படுவதில் உங்களுக்கு எந்த குறையும் இல்லை

மனைவியை கவர மன்மத மந்திரங்கள்
மனைவியை கவர மன்மத மந்திரங்கள்

அது உணர்வு பூர்வமானது. தனக்கு தேவை என்பதோடு தன் மனதை கவர்ந்த ஆணுக்கு மட்டுமே தன்னைத் முழு மனதோடு தர எந்த பெண்ணும் சம்மதிப்பாள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை நிறைந்த, தனக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆண்மகனே சிறந்தவன் என்ற எண்ணம் பெண்ணுக்கு எழும். அதுபோன்ற நம்பிக்கை தரும் கணவன் அமையப்பெற்றால் அவன் சொல்லும் வார்த்தைகளை வேதங்களாக நினைத்து பின்பற்றுவாள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மனைவியின் மனம் கவர உளவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

என்னதான் கணவன் மனைவி என்றாலும் காதல் என்பது கண்ணியமானதாக இருக்கட்டும். முத்தம் கூட மென்மையானதாக அச்சுறுத்தாதவகையில் இருக்கட்டும். எந்த ஒரு பெண்ணும் தனது கணவன் தனக்குரியவனாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்.

திருமணம் ஆன புதிதில் உங்கள் காதல் மனைவியோடு அதிக நேரம் செலவழியுங்கள். அலுவலகம் வேலை என்று இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தால் உங்கள் மனைவி தனக்கு ஒரு வேலையை தேடிக்கொண்டு போய்விடுவார். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் தவிர்க்க கொஞ்சநாளைக்கு மனைவியில் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்றுங்களேன் தப்பேயில்லை அப்புறம் உங்கள் பேச்சுக்கு மனைவியிடம் மறுபேச்சு என்பதே கிடையாது.

படுக்கை அறையில் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள் எங்காவது பொது இடத்திற்கு செல்லும் போதும் தன்னுடைய கணவன் தன்னுடைய கையை பிடித்துக்கொண்டு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களாம். பார்க், பீச், சினிமா என்று போகும் போது கொஞ்சம் கொஞ்சலும், கொஞ்சம் உரசலும் இருக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

புதிதாக திருமணமான உடன் எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். இது உங்கள் மனைவியை கண்டிப்பாக சமாதானப்படுத்தும்.

அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள். அலுவலகம் விட்டு வரும்போது ஏதாவது ஒரு பரிசை வாங்கி வாருங்கள். சின்ன முத்தம், அன்பாய் ஒரு தழுவல் என பாசத்தோடு அந்த பரிசுப் பொருட்களை கொடுத்துப்பாருங்களேன் உங்கள் மனைவி உங்களிடம் டோட்டல் சரண்டராவார்.

சமையலறையில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது உதவும் சாக்கில் சின்ன சின்ன சில்மிசங்களை செய்யுங்கள். இதுபோன்ற ரொமான்ஸ் நடவடிக்கைகளை எத்தனை வயதானாலும் பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். இப்படிப்பட்ட செயல்களை பெண்களுக்கு சமையல் அறையில் ஏற்படும் சிரமத்தை குறைக்கிறதாம்.

அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதை விட கட்டுப்பாடான சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் அதிகம் மகிழ்கின்றனராம். படுக்கை அறையில் தன் பேச்சை கேட்கவேண்டும், தான் சொல்வதற்கு கட்டுப்படவேண்டும் என்று கூறுவதை விட அவர்களையும் கொஞ்சம் சுதந்திரமாக செயல்பட விடுங்களேன். உணர்வுபூர்வமான இந்த சுதந்திரம் உங்களின் மனைவியின் மனதில் உங்களை ஹீரோ அளவிற்கு உயர்த்தி விடும்.

உறவின் போது ஐ லவ் யூ சொல்லுங்க..!!
உறவின் போது ஐ லவ் யூ சொல்லுங்க..!!

கற்றுக்கொள்ளவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் எதிர்பாராத தருணங்களில் இன்ப அதிர்ச்சிகளை கொடுப்பது இல்லற பூந்தோட்டத்தில் சந்தோச பூக்களை பூக்கச் செய்யும். எந்த மாதிரியான சர்ப்ரைஸ் தரலாம் என்று பட்டியலிட்டுள்ளனர் உளவியல் நிபுணர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

காலை நேரத்தில் உங்கள் துணை எழுந்திருக்கும் முன்பாக எழுந்து காபி அல்லது கலந்து கொண்டுபோய் படுக்கையில் இருந்து எழுப்புங்கள். விடுமுறை நாட்களில் ப்ரேக்ஃபாஸ்ட் செய்தும் அசத்தலாம். கார் காதவை திறந்து உங்கள் துணைக்கு தெரியாமல் ரோஜா பூங்கொத்தை வைத்துவிடுங்கள் அது உங்கள் துணைக்கு இன்ப அதிர்ச்சியைத் தரும்.

உங்கள் துணையின் மெயில்பாக்ஸ்சில் பூக்களால் நிரப்புங்கள். அது உங்களின் அபரிமிதமான காதலை உங்கள் துணைக்கு உணர்த்தும். அவ்வப்போது ரொமான்டிக் மெசேஜ் அனுப்புங்களேன்.

உங்கள் துணை அலுவலகத்தில் அதிக நேர பணியில் மாட்டிக்கொண்டாரா? நேராக அலுவலகம் சென்று பிக் அப் செய்துகொண்டு டின்னருக்கு அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து அசத்துங்களேன்.

பணிச்சூழலில் இருந்து கொஞ்சம் விடுபட்டு துணையின் லஞ்ச் சாப்பிடுங்கள். எதிர்பாராத தருணங்களில் துணையின் அலுவலகம் சென்று மதிய உணவிற்கு பிக் அப் செய்து கொள்ளுங்களேன். என்றைக்காவது துணையானவர் உணவை மறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டால் உணவை கொஞ்சம் ஸ்பெசலாக தயார் செய்து கொண்டு போய் கொடுங்களேன். மாலையில் அலுவலகம் விட்டு வரும் போது பளிச் புன்னகையுடன் வரவேற்பு கொடுங்கள். சின்னதாய் ஒரு முத்தம் காதோரம் ஐ லவ் யூ சொல்லியும் அசத்தலாம்.

உங்கள் துணைக்கு பிடித்த இடத்திற்கு திடீர் என்று அழைத்துச்செல்லுங்கள். அன்று முழுவதும் அவருக்கு பிடித்தது போன்ற விசயங்களை செய்து அசத்துங்களேன். மாதம் ஒருமுறையாவது சினிமா, ஹோட்டல் என்று முன்பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் துணை எதிர்பாராத தருணங்களில் அவரை அழைத்துச் சென்று அசத்துங்கள்.

எதிர்பாராத தருணங்களில், எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஐ லவ் யூ சொல்லி அசத்துங்களேன். உங்கள் துணைக்கு உங்கள் மீதான காதல் அதிகரிக்கும். சின்ன சின்ன காதல் கவிதைகளை அவ்வப்போது எழுதுங்கள். அதை எதிர்பாராத தருணங்களில் பரிசளியுங்கள். காதலை உணர்த்த எந்த மாதமாக இருந்தால் என்ன? அடிக்கடி அன்பான பரிசளியுங்கள்.

இதுபோன்ற சின்ன சின்ன சர்ப்ரைஸ் சந்தோசங்கள்தான் இல்லற வாழ்க்கையை என்றைக்கும் இளமையோடு வைத்திருக்கும் நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன்.

கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்...

போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை
போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை

தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளிடுகையில், போலந்து நாட்டின டொமஸியோ நகரிலுள்ள மதுக்கடையொன்றில் 24 வயதான குறித்த கர்ப்பிணிப் பெண் மது போதையில் மயங்கி வீழ்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அப்பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தேவை கருதி அங்கு அப்பெண்ணுக்கு சிசேரியன் சிகிச்சை மூலம் 2 வார குறைப் பிரசவ குழந்தை கிடைத்துள்ளது.

இக்குழந்தையின் குருதியில் சராசரியாக இருக்க வேண்டிய மதுவின் அளவை விட அதிகமாக அதாவது 4.5 கிராமாக இருந்துள்ளது.

இதனால், குழந்தையின் இதயத் துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததுடன் சுவாசக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தை உயிருக்கு ஆபாத்தான நிலையில் காணப்பட்டுள்ளது.

தொடர்ந்து தாயின் இரத்தத்தைப் பரிசோதித்து பார்ர்த்துள்ளனர் வைத்தியர்கள். இதன்போது போதையில் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட மதுவின் அளவினைப் போல 23 மடங்கு மது அவரின் குருதியில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனாலேயே குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என வைத்தியர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் போதைப் பழக்கத்தினால் வயிற்றில் வளர்ந்த சிசுவை கொல்ல முயன்ற குற்றத்திற்காக நீதிமன்றில் அத்தாயின் மீத வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கினை விசாரதித்த நீதிமன்றம் குறித்த தாய்க்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

இதேவேளை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் குழந்தையின் உடல் நிலை முன்னேற்றமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்