web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

எல்லையில் பாகிஸ்தான் விடிய விடிய தாக்குதல்! கடும் கொந்தளிப்பில் இந்திய ராணுவம்!!

[ சனிக்கிழமை, 12 சனவரி, 2013, ]
எல்லையில் பாகிஸ்தான் விடிய
ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு

நடத்தியிருப்பதால், எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் நீடித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் நேற்று மாலை மீண்டும் 5 நிலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கிருஷ்ணா கடி, சோனா கலி உள்ளிட்ட 5 ராணுவ நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்த துப்பாக்கிச் சத்தங்கள் இரவு முழுவதும் விடிய விடிய தொடர்ந்து கேட்டவண்ணம் இருந்தன.

இந்திய ராணுவத்துக்கு இதுவரை தாக்குதல் உத்தரவு (MSO – Military Strike Order) இன்னமும் கொடுக்கப்படவில்லை. மாறாக, தற்காப்பு யுத்தம் நடத்தும் ஆணை (Military Defending Attack Order) மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத் தரப்பில், காவலரண்களில் இருந்து அசையாமல், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால், கொதித்துப் போன மன நிலையில் உள்ளனர் இந்திய ராணுவத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் இருவரை கொன்றது, ஒருவரது தலையை வெட்டிச் சென்றது ஆகிய சம்பவங்களால், கோபம், அவமானம் ஆகிய உணர்ச்சிகளால் கொந்தளித்துப் போயுள்ள இந்திய ராணுவத்தினருக்கு, தாக்குதல் உத்தரவு (MSO) கொடுக்காமல் இழுத்தடிப்பது, வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லையில் உள்ள ராணுவ முகாம்களில் உள்ள இந்திய ராணுவத்தினரை அடக்குவது, படை தளபதிகளுக்கு கடினமான காரியமாக உள்ளது.

ரஜோரி ராணுவ முகாமில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி கேப்டன் மார்த்தான்ட் சிங், “இங்குள்ள ஜவான்கள் கோபத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ராணுவ சீருடை அணிந்த அனைவருக்கும் ஏற்பட்ட அவமானமாகவே நடந்த சம்பவங்கள் பார்க்கப்படுகின்றன. ஜவான்களை மிகுந்த சிரமத்தின் பின் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். நடந்த சம்பவங்களுக்கு நாம் திருப்பி பதிலடி கொடுக்கத்தான் வேண்டும். ஆனுல், அதற்கு சரியான காலமும், இடமும் அமைய வேண்டும். தாக்குவதற்கு இது சரியான நேரமல்ல” என்றார்.

மற்றொரு அதிகாரி மேஜர் ராஜ்தீப் சௌகான், “எல்லையோரம் இல்லாத வெவ்வேறு ராணுவ முகாம்களில் இருந்துகூட கோபக் குரல்கள் எழுகின்றன. அவர்களை பொறுமையாக இருக்குமாறு கூறி வருகிறோம். ராணுவத்தில் உள்ள நாம், தலைமையிடம் இருந்து உத்தரவு வரும்வரை உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, அமைதியாக காத்திருப்பதை தவிர வேறு மார்க்கமில்லை” என்றார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013) 
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013) 
Published news:
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)
  ஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு  (07/05/2013)
  பாடசாலை வகுப்பறையில் மாணவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியை   (05/05/2013)