web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

மனைவி போன் செய்து அழுததால் பாஸ்போர்ட்டை கிழித்து போட்டு ஏர்போர்ட்டில் நாடகமாடிய கணவன்

[ சனிக்கிழமை, 12 சனவரி, 2013, ]
மனைவி போன் செய்து அழுததால்
லாகூர்: பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் விமானத்தில் ஏறிய பின், பாஸ்போர்ட்டை காணவில்லை என்று கூறி கீழே இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ராத் மாவட்டத்தை சேர்ந்தவர் பைசல் அலி. இவர் இத்தாலி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய நேற்று லாகூர் ஏர்போர்ட் வந்தார். போர்டிங் பாஸ் வாங்கி கொண்டு விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்ப இருந்த நேரத்தில் திடீரென தனது பாஸ்போர்ட்டை காணவில்லை என்று கூறியதால் கீழே இறக்கப்பட்டார்.

அவரிடம் குடியுரிமை துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போனில் மனைவி பேசியதாகவும், தான் வெளிநாடு செல்வதால் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாகவும் அதனால் விமானத்தில் இருந்து வெளியேற பாஸ்போர்ட்டை கிழித்து போட்டு விட்டு காணவில்லை என்று நாடகமாடியதாகவும் கூறினார். போனில் மனைவி அழுவதை என்னால் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் கிழித்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து கொண்டு பைசல் அலியை விடுவித்தனர். இதனால் ஏர்போர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013) 
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013) 
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013) 
Published news:
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)
  ஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு  (07/05/2013)
  பாடசாலை வகுப்பறையில் மாணவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியை   (05/05/2013)
  சோமாலியாவில் கடும் பஞ்சம்: 2 ஆண்டுகளில் 258 ஆயிரம் பேர் பலி   (04/05/2013)