![]() |
இரண்டு மணிநேரம் வானில் பறந்த மலைப்பாம்பு மரணம் | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி, 2013, ] | ||
அவுஸ்திரேலிய விமானமான குவான்டாஸின் இறக்கையில் சிக்கி 10 அடி நீளமான மிகப்பெரிய மலைப் பாம்பு ஒன்று 2 மணித்தியாலங்களாக வானில் பறந்த வண்ணம் உயிருக்குப் போராடி பின்னர் இறந்துள்ளது. இச்சம்பவம் அவுஸ்திரேலிய விமானப் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்தில் உள்ள கெய்ர்ன்ஸ் என்ற இடத்திலிருந்து குவான்டாஸ் விமானம் நேற்றுக் காலை பாப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோபிஸுக்கு செல்லும் வழியிலேயே இச்சம்ம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானம் பறக்கத் தொடங்கிய பின் 20 நிமிடங்கள் கழித்து பெண் பயணி ஒருவர் விமான இறக்கையில் இந்த மலைப்பாம்பு சிக்கி உயிருக்குப் போராடுவதை ஜன்னல் வழியாகப் பார்த்தார். எனினும் நடு வானில் இந்த விமானத்தைத் புறப்பட்ட இடத்துக்கு திசை திருப்புவது உசிதமாகக் கருதப் படாததால் விமானம் போர்ட் மோபிஸுலேயே தரை இறக்கப் பட்டது. இதனால் 2 மணி நேரம் நீடித்த இந்த பயணத்தில் குளிர்ந்த காற்றை சமாளிப்பதற்கும் கீழே வீழ்ந்து விடாமல் இருப்பதற்கும் இந்த பைதொன் பாம்பு கடுமையாகப் போராடியுள்ளது. எனினும் விமானம் தரையிறக்கப் பட்ட பின்னர் இப் பாம்பு உயிரோடு காணப் படவில்லை. இறக்கையில் பல தடவை அடிபட்டதால் இரத்தம் சிந்தி உயிரை விட்டுள்ளது.
எதிர் பாராத இச்சம்பவம் வருத்தமளிப்பதாக குவான்டஸ் விமான சேவை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் கருத்துரைக்கையில் இது தமக்கு 2006 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான திகில் படமான 'Snakes on a Plane' திரைப்படத்தைப் பார்த்தது போன்ற உணர்வை மறுபடி ஏற்படுத்தியிருந்தது எனத் தெரிவித்துள்ளனர்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
நான்கு சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசயப் பெண் (20/05/2013)
|
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது (20/05/2013)
|
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர் (19/05/2013)
|
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
|
Published news: |
வெறித்தனமாக ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி: சிரியாவில் பரபரப்பு (14/05/2013)
|
அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர் (13/05/2013)
|
இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம் (13/05/2013)
|
உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம் (12/05/2013)
|
விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி (11/05/2013)
|
30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா (10/05/2013)
|


நான்கு சிறுநீரகங்களுடன் உயிர் வாழும் அதிசயப் பெண்









