web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தீயில் கருகி உயிருக்கு போராடிய இளம் பெண்

[ திங்கட்கிழமை, 14 சனவரி, 2013, ]
தீயில் கருகி உயிருக்கு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் விவசாய தொழிலாளி ராசேந்திரன் இவரது மனைவி மஞ்சுளா (30). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தையில்லை என்ற குறை இருந்துள்ளது. இதனால் மஞ்சுளா அடிக்கடி மனமுடைந்து காணப்படுவார் என்று கூறப்படுகிறது.

மனமுடைந்து காணப்பட்ட மஞ்சுளா கடந்த சில நாட்களாக அவர் பிறந்த ஊரான புள்ளான்விடுதி கிராமத் திற்கு சென்று தாய் வீட்டில் இருந்துவிட்டு பொங்கல் பண்டிகைக்காக சனிக் கிழமை மேற்பனைக்காடு வந்துள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை மேற்பனைக்காடு பெரிய குளம் பகுதியில் பாதி எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கிடந்துள்ளார்.

தீ எரிவதுடன் உடல் எரிச்சலை தாங்க முடியாமல் அருகில் கொஞ்சமாக கிடந்த தண்ணீரை நோக்கி ஓடியிருக்கிறார். அவரால் ஓட முடியாமல் தண்ணீருக்கு அருகில் விழுந்து கிடந்தார். அந்த பகுதிக்கு வயல் பகுதிக்கு வந்தவர்கள் பார்த்துவிட்டு ஊராட்சித் தலைவர் மற்றும் அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸில் அறந்தாங்கி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை போட்டுத்தள்ளிய மனைவி! பரபரப்பு வாக்குமூலம்! (படம் இணைப்பு)   (19/06/2013) 
  வட-இந்தியாவில் மழைவெள்ளம்; 70 பேர் பலி, பலரைக் காணவில்லை   (19/06/2013) 
  2028ஆம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தும்... ஜனத்தொகையில்...   (18/06/2013) 
  கனிமொழியும் வேட்பு மனு தாக்கல் செய்தார்   (18/06/2013) 
  மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்  (15/06/2013) 
  சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த மாணவி கைது   (15/06/2013) 
Published news:
  ஆரணியில் சோகம் ஸ்வீட்டில் விஷம் தடவி குழந்தையை கொன்று தந்தை, மகள் தற்கொலை  (12/06/2013)
  இன்று நடக்க இருந்த பிளஸ்-1 மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்   (12/06/2013)
  மனைவிய 40 கி.மீ தூரம் தோளில் சுமந்தவாறு மருத்துவமனையில் சேர்த்த இளைஞர்!   (11/06/2013)
  உளுந்தூர்பேட்டை அருகே ஒரு காலுடன் பிறந்த ஆண் குழந்தை   (10/06/2013)
  கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர்   (10/06/2013)
  டெல்லி பல்கலைக்கழக மாணவி காரினுள் இருவரால் கற்பழிப்பு  (10/06/2013)