web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கல்லீரல் நோயை கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்

[ திங்கட்கிழமை, 14 சனவரி, 2013, ]
கல்லீரல் நோயை கண்டுபிடிப்பதற
உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு.

ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

வாய் துர்நாற்றம்

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

வெளுத்த சருமம்

கல்லீரலில் பாதிப்பு இருந்தால் சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால் தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு

கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

வயிறு வீக்கம்

கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  ஆண்களுக்கு முடி கழிதலை தடுக்க 20 சிறந்த வழிகள்   (25/05/2013) 
  சர்க்கரை நோயளிக்கு புழுங்கல் அரிசி   (25/05/2013) 
  சரும அழகிற்கு உதவும் வினிகர்   (25/05/2013) 
  பட்டு போல் பளபளப்பான கூந்தல்....   (25/05/2013) 
  ஒரு நாளில் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?   (25/05/2013) 
  தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்   (22/05/2013) 
Published news:
  குண்டுக்கு மருந்து பூண்டு   (19/05/2013)
  கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு பப்பாளி - ஆரஞ்சு பழ பேஷியல்   (19/05/2013)
  உடற்பயிற்சி - கவனிக்கப்பட வேண்டியவை   (19/05/2013)
  குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல   (17/05/2013)
  கரு வளையங்கள் நீங்க   (17/05/2013)
  மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியம்   (17/05/2013)