web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

அன்பு மகள் ரிசானாவின் ஆத்மாவிற்கு!

[ திங்கட்கிழமை, 14 சனவரி, 2013, ]
அன்பு மகள் ரிசானாவின் ஆத்மாவ
சின்னஞ்சிறு சிறுவனான வயதில் மிருக வேள்வி ஒன்றை கோவில் முன்றலில் கண்டு வெருண்டு அச்சம் கொண்டேன்… கண்களில் பயம் கலந்த கண்ணீர் உதிர்த்தேன்… இது என்ன

கொடுமையம்மா என குழறிய வார்த்தைகளில் அம்மாவிடம் முறையிட்டேன் அழுதபடியே...

அன்பு மகளே இஸ்லாமிய மதம் காத்த மகளே ரிசானா இன்னொரு மனித வேள்வியைக் கண்டேன்…

இஸ்லாம் தழுவிய மண்ணில் மக்கள் கூடும் சதுக்கத்தில் வாய்திறந்து மனிதர்க்கு சொல்ல மனித மொழி அறியா அந்த ஆடு தனக்கு என்ன நடக்கப் போகிறதென்று புரியாது சுற்றுமுற்று பார்க்க மனிதர்களோ வெட்டித் தலைவேறாகி வேறாகி முண்டம் வேறாகியதை விசிலடித்தும் கைதட்டடியும் ஆராவாரித்தும் இரசித்தனர்…

அவர்கள் காட்டுமிராண்டி மிருகங்களே கூடி நின்ற கூட்டம் நடுவே மொழிகொண்ட மனிதர் சூழ நிற்க புனிதம் காத்தோம் என அவர்கள் புளகாங்கிதம் அடைய வெள்ளை உடையில் பலி ஆடாய் ஆனாயே நீ மகளே ரிசானா…

மரணம் உன்னை கணம் கணமாய் உருசிக்க தீட்டிய வாளின் கூர்மை உன் தலையை வெட்டிச் சரித்த காணொளி கண்டு நெஞ்சம் பதைபதைக்கின்றது முடியவில்லை மகளே தாங்க முடியவில்லை என்ன கொடுமை இது…

சிறையில் வாடினாய் வேதனையே உன் வாழ்வாகியது விடிவு வரும் என நீ காத்திருக்க மரணம் உனக்கு விடிவானது.நீ எதையெல்லாம் நினைத்திருப்பாய் உன் நாட்டை உன் வீடடை உன் தாயை உன் உறவுகளை ஓடியாடித் திரிந்த மூதூர்க் கிராமத்தை உன் பள்ளித் தோழிகளை தெருவோரக் கடைகளை உனது ஓலைவீட்டின் ஒவ்வொரு தென்னம் கீற்றுக்களையும் வறுமையின் கொடுமையாயினும் ஒரு வேளைக் கஞ்சியுடனாவது நீ மூதூரில் வாழ்ந்திருப்பாய்…

குடும்பத்தின் பசி போக்க ஊர்விட்டுப் போய் உயிர் விட்டாயே மகளே ரிசனா தாங்க முடியவில்லை… தங்கள் தவறை மறைக்க தங்கள் நாட்டுச் சட்டத்தின் பிடியிலிருந்து தம்மைக் காக்க இன்னொரு நாட்டு பெண்தானே என உன்னைக் குற்றவாளியாக்கிய கொடுமையை செய்த பெற்றோரே அல்லாவிற்கும் புனித குர்ரானுக்கும் இழுக்காகி விட்டீர்கள்…

அல்லாவே உண்மையை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள் தாழ் பணிந்து கேட்கின்றேன்… அன்பு மகளே ரிசானா உண்மை மறைக்கப்பட்ட செய்தி என்றோ ஒரு நாள் உன் ஆத்மாவை வந்து சேரும் என சமர்ப்பணமம்மா இக்கண்ணீர்க் கவிதை…

-யதார்த்தன்-

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
Published news:
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)