web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

ஹேம்ராஜ் தலை வராவிட்டால் 10 பாக். வீரர் தலையை வெட்டி கொண்டுவரனும்: சுஷ்மா ஆவேசம்

[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ]
ஹேம்ராஜ் தலை வராவிட்டால்
இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை தராவிட்டால் பாகிஸ்தானின் 10 வீரர்களின் தலையையாவது துண்டித்து எடுத்துவர வேண்டும் என்று பாஜக மூத்த

தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கோரமாக கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் ஹேம்ராஜ் என்பவரது தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். எடுத்துச் செல்லப்பட்ட தலையை பாகிஸ்தான் ஒப்படைக்க இந்தியா வலியுறுத்தி வருகிறது இந்நிலையில் ஹேம்ராஜூக்கு உரிய மரியாதை செலுத்தப்படவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஹேம்ராஜின் வீட்டுக்கு பாஜக தலைவர் நிதின் க்த்காரி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா, ஹேம்ராஜின் தலையை அவர்கள் கொடுக்காவிட்டால் அவர்களின் 10 தலையையாவது வெட்டிக் கொண்டுவர வேண்டும். எந்த ஒரு பதிலடி தராமலும் நாம் பேச்சுவார்த்தையில் உட்காரக் கூடாது. ஏதாவது ஒருவகையில் அரசு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்   (20/05/2013) 
  தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை   (20/05/2013) 
  வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது   (20/05/2013) 
  மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!   (19/05/2013) 
  கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு   (19/05/2013) 
  மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை!   (19/05/2013) 
Published news:
  டாஸ்மாக் கடையில் 'சைட் டிஷ்' சண்டை… முந்திரிக் காட்டில் கொலையில் முடிந்த பரிதாபம்   (15/05/2013)
  இந்தியாவின் முதல் பெண் ஜவான் தூக்கில் பிணமாகத் தொங்கினார்!   (15/05/2013)
  ஜி.ஹெச்ல் குழந்தையை திருடி ரூ.4 லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது   (14/05/2013)
  ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம்   (14/05/2013)
  4 மாத கர்ப்பிணி தாயை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது   (14/05/2013)
  கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி!   (13/05/2013)