![]() |
யாழில் 3 பிள்ளைகளின் தந்தை தூக்கிலும் வேலும்மயிலும் கிணற்றிலிருந்தும் சடலங்களாக மீட்பு | ||
| [ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ] | ||
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான வைத்தி பாக்கியநாதன் என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆவார். குறித்த பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டிற்கு எதிர்ப்புறமாக உள்ள தோட்டக்காணியில் உள்ள மரமொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். அவரது மனைவியால் (13) நேற்றுக் காலை சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை மேலைப்புலோலியில் தோட்டக் கிணற்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். வதிரி பூவக்கரையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய கோணன் வேலும்மயிலும் என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆவார். நேற்றுக் காலை பருத்தித்துறைப் பொலிஸாரினால் சடலம் மீட்க்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் மனநோயாளி எனவும், மேலைப்புலோலியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு வந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த இடத்திற்கு அருகிலுள்ள ஆலயத்தில் இருந்து சைக்கிளும், சடலமாக மீட்க்கப்பட்ட கிணற்றடியில் இருந்து கிருமிநாசினிப் போத்தலும் மீட்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பு வசமுள்ள திருமலை நகர சபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் (19/06/2013)
|
இரண்டாக பிளந்த குழந்தையின் ஆண் உறுப்பு -சத்திரசிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு சாதனை (19/06/2013)
|
கொழும்பு பல்கலை கட்டிடத்திலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு (18/06/2013)
|
13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தமும் செய்யவேண்டியதில்லை: எதிர்க்கட்சிகளின் கூட்டு (17/06/2013)
|
இலங்கைக் கடறப்பரப்பிற்கு அண்மைய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் (17/06/2013)
|
இணையத் தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்ய நடவடிக்கை (16/06/2013)
|


உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பு வசமுள்ள திருமலை நகர சபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம்









