வயிற்றை முன் தள்ளி நிற்க பழகிவிடுகின்றனர். பிரசவத்திற்கு பின்பும் அதே நிலை ( posture) நீடிப்பதால் முதுகு எலும்பு மற்றும் எலும்பின் நடுவில் இருக்கும் மிருதுவான பகுதி பாதிப்பிற்குள்ளாகின்றது மற்றும் பெண்கள் மேற்கொள்ளும் கடுமையான வேலைப்பளு அதீத உடல் எடை ஆகியவையும் முதுகு வலிக்கு மிக முக்கிய காரணமாகும்.
அதே போல் இப்போது வலியற்ற பிரசவத்திற்காகவும் மற்றும் சிசேரியன் செக்ஷன்காகவும் முதுகுத்தண்டில் ஏற்றப்படும் ஊசிகளால் முதுகெலும்பு பல பின் விளைவுகளை சந்திக்கின்றது. பெரும்பாலும் முதுகெலும்பினை நேராக வைத்து அமர்வதற்கும் நடப்பதற்கும் பழகிக்கொண்டாலே பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
முதுகிற்கான ஜசோமெட்ரிக் பயிற்சிகள்.........
ஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது. இது யோக பயிற்சியையும் சீன தற்காப்பு கலையையும் அடிப்படையாக கொண்டது.. சாதாரண உடற்பயிற்சிகளை விடவும் ஜசோமெட்ரிக் பயிற்சிகள் மிகச்சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால் இன்றும் பாடி பில்டர்கள் தங்கள் உடலை வலுவாக்க இப்பயிற்சியினை மேற்கொள்கின்றனர்..
1. முதல் நிலையான டேபிள் டாப் எனப்படும் நிலைக்கு முதலில் நேராக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி 90 டிகிரி அளவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் முதுகெலும்பை சற்று கவனத்தில் கொண்டு வந்து பாருங்கள். அதில் லேசான வளைவு கண்டிப்பாக இருக்கும். இப்போது வளைவுடன் இருக்கும். முதுகெலும்பை முடிந்த அளவு நேராக்கி சில நிமிடங்கள் அதே நிலையில் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.
2. இரண்டாவது நிலை பெல்விக் ப்ரிட்ஜிங்.கால்களை மடக்கி வைத்துக்கொண்டு இடுப்பு பகுதியினை மட்டும் முடிந்த அளவு உயர்த்தி அதே நிலையில் 30 செகண்டுகள் இருத்தல் வேண்டும். இது போல் 3 செட்கள் அவசியம்.
3. பைலேட்ஸ் கிரன்ச் கால்களை 90 டிகிரியளவில் மடக்கி வைத்துக்கொண்டு உடலை மேல் நோக்கி முடிந்த அளவு கொண்டு வந்து 30 செகண்ட்கள் இருத்தல் வேண்டும்.
4 . குப்பறபடுத்துக்கொண்டு இருகால்களையும் ஒன்றாக்கி முட்டியை மடக்காமல் எவ்வளவு தூரம் மேல் நோக்கி தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் மேல்தூக்கி நிறுத்த வேண்டும்.
5 .பிரண்ட் ப்ரிட்ஜிங்... குப்பற படுத்த நிலையில் கைகளை ஊன்றி உடலை மட்டும் மேல் நோக்கி கொண்டு செல்ல வேண்டும். குறைந்த பட்சமாக 30 செகண்டுகள் இந்த நிலையில் நீடித்தல் நலம் இப்பயிற்சியின் போது முதுகெலும்பு நேராக இருத்தல் அவசியம்.
6. ஏர் பிளானிங் .... வலது காலையும், இடது கையையும் தரையில் ஊன்றிக்கொண்டு முதுகெலும்பை வளைக்காது உடலை நேராக்குங்கள். இந்த நிலையை சூப்பர்மேன் போஸ் என்றும் ஏர் பிளானிங் என்றும் கூறுவர்.
மேற்கண்ட பயிற்சிகள் அனைத்தையும் ஒரு நல்ல பிசியோதெரபிஸ்டின் மேற்பார்வையில் கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தால் முதுகுவலிக்கு குட் பை கண்டிப்பாக சொல்லலாம்.

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்