![]() |
குழந்தையும் ரோபோவும் குணத்தால் ஒன்று | ||
| [ வியாழக்கிழமை, 08 செப்ரெம்பர், 2011, ] | ||
புதிதாக உருவாக்கப்படும் ரோபோக்களை குழந்தையாக கருதிதான் ஆரம்பக்கட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்று அமெரிக்கா வாழ் இந்திய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆராய்ச்சி, இயற்பியல், வேதியியல், ஆட்டோமொபைல் உள்பட பல துறைகளிலும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. பொருட்களை எடுப்பது, வைப்பது போன்ற செயல்களை செய்வதற்காக உருவாக்கப்படும் ரோபோக்களுக்கு அதற்கான பயிற்சிகளை அளிப்பதும் முக்கியம். அமெரிக்காவின் கார்ன்வெல் பல்கலைக்கழகத்தின் ரோபோடிக் ஆய்வுக்கூடத்தில் ரோபோக்களுக்கு அஷுதோஷ் என்ற விஞ்ஞானி தலைமையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர் கான்பூர் ஐஐடியில் படித்தவர். ரோபோ பயிற்சி பற்றி இவர் கூறியதாவது: பொருளின் வடிவம், நிறம், அவற்றின் அசைவுகள் ஆகியவை குழந்தைகளுக்கு புதிதாக இருக்கும். எந்த பொருளை எடுத்தாலும் கூர்ந்து கவனிக்கும். ஆர்வத்துடன் திருப்பித் திருப்பி பார்க்கும். ரோபோக்களும் ஏறக்குறைய குழந்தைகள் போன்றதுதான். பொருட்களின் வடிவம், நிறம் போன்றவற்றை குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல ரோபோவுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். பொருட்களை எடுக்க, வைக்க பயிற்சி அளிக்கிறோம். குழந்தைகள் ஒரு பொருளை உடனே எடுத்துவிடும். ஆனால், ஒரு இடத்தில் அதே பொருளை வைப்பதற்கு சற்று சிரமப்படும். ரோபோவும் இப்படித்தான். மேலும், மேஜை என்றால் டம்ளரை நேராக வைக்க வேண்டும். பாத்திரம் தேய்க்கும் கருவியில் தலைகீழாக வைக்க வேண்டும். எந்த பொருளை, எந்த இடத்தில் எந்த பொசிஷனில் வைக்க வேண்டும் என்றும் ரோபோவுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு, ஏற்கனவே வைத்து பழக்கப்பட்ட பொருட்களை ரோபோக்கள் 98 சதவீதம் சரியாக வைத்துவிடுகின்றன. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு, புதிய பொருட்களைக்கூட ரோபோக்கள் கீழே போட்டுவிடுவதில்லை. 95 சதவீதம் சரியான இடத்தில் வைக்கின்றன. வேலை துல்லியமாக இருக்கும் என்றுதான் பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. அதற்கு, இதுபோன்ற பயிற்சிகள் மிகமிக அவசியம். இவ்வாறு அஷுதோஷ் கூறியுள்ளார். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
|
Published news: |
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|
பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு (06/05/2013)
|
புதிய வகையிலான இன்டர்நெட் வைரஸ் அபாயம்..! (06/05/2013)
|
uTorrent மென்பொருளை அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு... (05/05/2013)
|
புகைப்படங்களில் Reflection எபக்ட்டினை தோற்றுவிப்பதற்கு உதவும் மென்பொருள் (04/05/2013)
|


Outlook.com தரும் புத்தம் புதிய வசதி









