 |
|
|
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவருக்கு ரூபா ஐம்பதாயிரம் தண்டப் பணமும் ஆறுமாத கால கட்டாய கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் 47 ஆயிரத்து இருநூற்று ஐம்பது மில்லி லீற்றர் கோடாவினைத் தன்வசம் வைத்திருந்த ஒருவரை கிளிநொச்சிப் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்.
குறித்த குற்றவாளியை நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் மாவட்ட நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் முன்னிலைப் படுத்தியபோது குறித்த நபருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட துடன், தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறுமாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
பிரஸ்தாப நபர் ஏற்கனவே நீதிமன்றில் தண்டனை பெற்று மீளவும் குற்றச் செயலில் ஈடுபட்டமையால் இவற்றுக்கும் மேலாக ஆறுமாத கால கடூழிய சிறைத் தண்டனையினையும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிவான்.
மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இதனால் கசிப்பு அருந்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. மேலும் குடும்பத் தலைவர்கள் மது போதையில் தள்ளாடுவதால் ஏனையவர்களின் நிலை மோசமடைந்து காணப்படுகின்றது. |