![]() |
புது மணத் தப்பதிகளா நீங்கள்? முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . ! | ||
| [ வியாழக்கிழமை, 12 சனவரி, 2012, ] | ||
ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்.....
*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள். * மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் பெண் மருத்துவரிடம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம். *முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தா லோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம். *அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க் கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும். *முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். * உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள். * நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம். * காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட் தடவிக் கொள்ளுங்கள். * உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள். * கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும். * படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு. * முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம் தெரிவியுங்கள். * முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். * அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். * உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள். * முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிக மாக்கத்தான் செய்யும். * வலியையும், வறட்சியையும் குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம். * உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல (17/05/2013)
|
கரு வளையங்கள் நீங்க (17/05/2013)
|
மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியம் (17/05/2013)
|
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! (16/05/2013)
|
பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள்! (15/05/2013)
|
மூட்டு வலியா? (15/05/2013)
|
|
Published news: |
மஞ்சள் தூள் ஃபேஸ் பேக் (12/05/2013)
|
சரும அழகை காக்கும் க்ரீன் டீ (12/05/2013)
|
தோள்பட்டை வலிமை பெற பயிற்சி (12/05/2013)
|
குட்டீஸ்க்கு தாளம்மை வந்தால் என்ன செய்யலாம்? (12/05/2013)
|
பாலில் உள்ள சத்துக்கள்....... (09/05/2013)
|
அழகான சருமத்திற்கு ரெட் ஒயின் (09/05/2013)
|


குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல









