![]() |
இனிய இசை மற்றும் கேலிச்சித்திரங்களுடன் கூகுளின் சாதனையை கண்டு ரசிக்க. | ||
| [ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி, 2012, ] | ||
வீடியோ காட்சிகளுக்கென கூகுள், ஏற்கனவே இயங்கி வந்த யூடியூப் தளத்தினை வாங்கிச் செம்மைப்படுத்தி அடிக்கடி அதனை மேம்படுத்தும் செயலில் இறங்கியது.
வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ கோப்புகளை பதிவேற்றம் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்புபவர்கள் தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும், தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது. இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தினசரி இந்த தளத்தில் 400 கோடி வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 60 மணி நேர வீடியோ காட்சிகள் கோப்புகளாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு விநாடியிலும் ஒரு மணி நேர வீடியோ காட்சி பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதாவது ஒவ்வொரு 24 விநாடிகளிலும் 24 மணி நேர வீடியோ பதிவேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்ந்து 25% அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் கூகுள் அனைத்து பிரிவுகளிலும் நல்ல தரமான வீடியோ காட்சிகளை அனுமதிப்பதுதான். கூகுள் இதனைக் கொண்டாடும் வகையில் தனியே தளம் ஒன்றை www.onehourpersecond.com என்ற முகவரியில் அமைத்துள்ளது. இங்கு சென்றால் இனிய இசை மற்றும் கேலிச்சித்திரங்களுடன் கூகுளின் சாதனையைப் பல வழிகளில் ஒப்பிட்டு கண்டு ரசிக்கலாம். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க! (21/05/2013)
|
20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய கருவி: இந்திய-அமெரிக்க மாணவியின் சாதனை (21/05/2013)
|
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் (20/05/2013)
|
|
Published news: |
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி (16/05/2013)
|
பி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்
(15/05/2013)
|
ஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு (14/05/2013)
|
யு டியூப் வழங்கும் புதிய தொலைக்காட்சி வசதி..! (13/05/2013)
|
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எச்சரிக்கை..! (11/05/2013)
|
புதிய இணைய வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க (08/05/2013)
|


இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்தனுமா? இங்க வாங்க!









