![]() |
ஆயுதங்களுடன் வந்த நபர்கள் யார் ? அல்லாடும் இராணுவத்தினர் ! | ||
| [ வியாழக்கிழமை, 01 மார்ச், 2012, ] | ||
கிளிநொச்சி நகருக்கு அப்பாலுள்ள சில கிராமங்களில் நேற்றுக் காலை தொடக்கம் நண்பகல் வரை அதிகளவு இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து வீடுவீடாகச்சென்று சோதனை நடவடிக்கையினை நடத்தியுள்ளனர் என அறியப்படுகிறது. பல மாதங்களுக்குப் பின்னர் இவ்வாறான ஒரு சோதனை நடைபெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யூனியன்குளம், ஸ்கந்தபுரம் போன்ற பகுதிகளில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் அட்டகாசம் புரிந்ததுடன் பெருமளவு பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றனர் என்ற செய்தி வெளியாகியிருந்தது. இக் கொள்ளையர்கள் கொண்டுவந்த ஆயுதங்கள் நிஜமானவை என்றும் அவற்றில் தானியங்கித் துப்பாக்கிகளும் அடங்குவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது இராணுவத்தைக் கிலிகொள்ளவைத்துள்ளதாம்.இதன் எதிரொலியாக நேற்று காலை தொடக்கம் யூனியன்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், கோணாவில் போன்ற பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டிருந்தனர். இந்த தேடுதல் வீடுவீடாக மேற்கொள்ளப்பட்டது. எனினும் இதில் மக்கள் யாரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை, மேலும் இந்த தேடுதலில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மோப்ப நாய்களாலும் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து இராணுவத்தினர் உஷார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |


யாழில் அடித்துக் கொலை செய்யப்பட்ட 9 வயதுச் சிறுவன்! சந்தேகத்தில் தந்தை கைது!!









