web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பொய் வாக்குமூலத்தை வழங்குமாறு அநுராதபுரம் சிறைக்கைதிகளுக்கு அழுத்தம்.

[ புதன்கிழமை, 07 மார்ச், 2012, ]
பொய் வாக்குமூலத்தை வழங்குமாற
''நாம் இலங்கையர்' அமைப்பிற்கு எதிராக வாக்குமூலம் வழங்குமாறு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்குசிறைச்சாலை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்னர். கணக்காய்வுப் பிரிவிற்கு கடந்த 23ஆம் திகதி அழைத்துவரப்பட்ட 6 புலிச் சந்தேக நபர்கள் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். கணக்காய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலை அதிகாரியொருவர், பொய்யான வாக்குமூலத்தை வழங்குமாறு சந்தேக நபர்களை அச்சுறுத்தியுள்ளார். எனினும், இதனை சிறைக் கைதிகள் நிராகரித்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க தமது அமைப்பின் சட்டத்தரணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ''நாம் இலங்கையர்'' அமைப்பு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவினர் இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைக்கைதிகளின் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவே சிறைக்கைதிகளிடமிருந்து பொய்யான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தமைக்கான காரணமாகும்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து