![]() |
ஊத்தங்கரை சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் குண்டு வெடித்து இறந்தவர் ராணுவ வீரர் | ||
| [ புதன்கிழமை, 07 மார்ச், 2012, ] | ||
ஊத்தங்கரை : ஊத்தங்கரையில் நேற்று இரவு நடந்த குண்டு வெடிப்பில் பலியானது ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் இருந்து வெடிமருந்துகள்,வரைபடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நக்சலைட்களுடன் சேர்ந்து தீவிரவாத சதி வேலையில் ஈடுபட்டு வந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் காமாட்சி ஜெராக்ஸ், டீக்கடை உள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் 2 வாலிபர்கள் கடையில் டீ குடித்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. ஒரு வாலிபர் உடல் சிதறி இறந்து கிடந்தார். அவரது உடல் பாகங்கள் நாலாபுறமும் சிதறிக் கிடந்தன. கடை உரிமையாளர் கிருஷ்ணனின் தாய் காந்தலட்சுமி (60), தம்பி ராஜா படுகாயம் அடைந்தனர். டீக்கடை வாசலில் குண்டு வெடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வந்த வாலிபர் மனித வெடிகுண்டா என்ற பரபரப்பும் ஏற்பட்டது. தகவல் கிடைத்து போலீசார் விரைந்து வந்தனர். ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி சாலை சீல் வைக்கப்பட்டது. சேலம் சரக டிஐஜி சஞ்சய்குமார், கிருஷ்ணகிரி எஸ்.பி. அபிஷேக் தீட்சித், ஊத்தங்கரை டிஎஸ்பி காசிவிஸ்வநாதன், கியூ பிராஞ்ச் டிஎஸ்பி லோகநாதன், வேலூர் தடய அறிவியல் துணை இயக்குனர்கள் அழகேசன், ரவிசங்கர், அழகிரி, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, தனிபிரிவு, உளவு பிரிவு போலீசார், கிருஷ்ணகிரி ஆர்டிஓ சதீஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சென்னையில் இருந்து சிறப்பு குழுவும் விரைந்தது. விசாரணையில் தெரியவந்தது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உடல் சிதறி இறந்தவர் ஊத்தங்கரை எக்கூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட படத்தான்கொட்டாயை சேர்ந்த சீனிவாசன் (25). திருமணம் ஆகவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக அருணாசல பிரதேசத்தில் ராணுவ வீரராக (கன்மேனாக) பணியாற்றி வந்தார். 2 மாத லீவில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 8-ம் தேதி பணிக்கு திரும்ப இருந்த நிலையில், பலியாகிவிட்டார். அவரது வீட்டில் போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர சோதனை நடத்தினர். அவரது பையில் இருந்து ரிமோட் கருவிகள், வெடி மருந்துகள், சிறிய உருண்டை வடிவ குண்டுகள், எலக்ட்ரானிக் வரைபடங்களை கைப்பற்றினர். அவை வெடிகுண்டு தயாரிக்க உதவும் வரைபடங்களா என்று ஆய்வு செய்து வருகின்றனர். நக்சல்களுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததா, நக்சல்களுக்கு வெடிகுண்டுகள் தயாரித்து கொடுத்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த சீனிவாசனுக்கு அப்பா இல்லை. அம்மா கூலி தொழிலாளி. அவர் கூறுகையில், ‘அவனது பை நிறைய வயர்கள் இருக்கும். யாரும் அதன் பக்கம் போகாதீர்கள், தொடாதீர்கள் என்பான். பட்டாளத்தில் குண்டு தயாரிக்கும் வேலை செய்வதாக கூறியிருக்கிறான்’ என்றார். சீனிவாசனுடன் வந்த வாலிபர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. குண்டுவெடிப்பில் அவரும் காயமடைந்திருப்பார். தப்பிய அவர் அருகே உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறாரா, வெளி மாநிலத்துக்கு தப்பிவிட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி! (22/05/2013)
|
தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு ! (23/05/2013)
|
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு (23/05/2013)
|
நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை (23/05/2013)
|
செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு (22/05/2013)
|
பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை! (22/05/2013)
|
|
Published news: |
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்! (18/05/2013)
|
தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது (18/05/2013)
|
ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது (18/05/2013)
|
மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி! (18/05/2013)
|
திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு (17/05/2013)
|
ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு (17/05/2013)
|


மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!









