![]() |
மண்டியிட்டு சாவதை விடவும் சண்டையிட்டு மடிவது மேல்! | ||
| [ சனிக்கிழமை, 07 ஏப்ரல், 2012, ] | ||
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்தியோ ஜெனீவா தீர்மானங்களுக்கு அடிபணிந்தோ நாட்டை காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ், சிங்கள உறவை சிதைக்க அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தலைமையில் சர்வதேசம் செயற்படுகின்றது. எனவே, நாட்டிற்கு எதிரான சர்வதேசத்தின் சூழ்ச்சிகளுக்கு பின்னணியில் உள்நாட்டு துரோகிகள் பலரும் உள்ளனர். அதேபோன்று சம்பந்தன் குழுவினர் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும். சர்வதேசத்திடம் கோள் சொல்வதால் எவ்விதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில், உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்றாவது தமிழ் சிங்கள புத்தாண்டை இலங்கையில் ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர். தற்போது நாட்டில் காணப்படும் நிலையான சமாதானம் மற்றும் சுதந்திரம் என்பவற்றை சீரழிக்க சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன. இதன் மூல சூத்திரதாரிகளாக அமெரிக்காவும் இந்தியாவுமே உள்ளன. போலியான போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை காரணங் காட்டி அமெரிக்கா இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுகின்றது. ஜெனீவா பிரேரணையின் பின்னணியில் இலங்கையை பழிவாங்கும் நோக்கமே உள்ளது. எனவே மண்டியிட்டு சாவதை விட சண்டையிட்டு மடிவதே மேல். இதற்கு மூவின மக்களும் ஓரணியில் திரள வேண்டும். தமிழ் மக்களை பொறுத்தவரையில் உள்நாட்டில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர். அவர்களின் கலாசாரம் மற்றும் மரபுமைகள் என அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. இதற்காக அரசாங்கம் மிகவும் பங்களிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தமிழ் மக்களை புறம்தள்ளி விடவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆனால் தமிழ் சிங்கள ஒற்றுமையை சீரழிக்க பாரியளவில் முன்னெடுப்புக்களை அந்நிய சக்திகள் மேற்கொள்கின்றன. இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார். ஆனால் தமிழ் சிங்கள ஒற்றுமையை சீரழிக்க பாரியளவில் முன்னெடுப்புக்களை அந்நிய சக்திகள் மேற்கொள்கின்றன. இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
|
Published news: |
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு- (16/05/2013)
|
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|


மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!









