web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கண்களை பிடுங்கி எறிந்த காதலன்: உண்மைச் சம்பவம் !

[ சனிக்கிழமை, 14 ஏப்ரல், 2012, ]
கண்களை பிடுங்கி எறிந்த
'என்னிடம் இருந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்ட அவன், என் வாழ்வில் விலைமதிப்பில்லா எனது பார்வையையும் பறித்துக்கொண்டான்....'
கண்ணையிழந்த மாதுவின் கண்ணீர் குரல் இப்படி ஒலிக்கின்றது.

சென்ற ஆண்டு காதலனால் தொடர் 12மணிநேர 'திட்டமிட்ட கொடூர தாக்குதலில்' கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் தன் பார்வையை முற்றிலும் இழந்துள்ளார் Tina Nash. அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்களால் அப்பெண்ணின் மற்றொரு கண்ணை அகற்ற முடிந்ததே தவிர அவளுக்கு பார்வையை மீட்டுத்தர முடியவில்லை.

தன்னை இவ்வளவுகாலம் கறுப்புக் கண்ணாடிக்குள் மறைத்துக்கொண்ட Tina, இப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடூரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட முன்வந்துள்ளார். இன்று காலை, தன் குற்றத்தை நீதிமன்றத்தில் Shane Jenkin,33 ஒப்புக்கொண்ட பின்னர் 'இப்போதுதான் தன் காதலர் தன் வாழ்வில்

மாற்றங்களை ஏற்படுத்த துணிந்திருக்கிறார்' என நினைத்து மெருமிதம் கொள்வதாக அம்மாது சாடியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட Jenkin, Cornwall-ஐ சேர்ந்தவராவார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் Jenkin அடுத்த மாதம் சிறை தண்டனைக்கு ஆட்படுத்தப் படுவாரென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கண் பார்வையை இழந்தது மட்டுமல்லாது தாடை மற்றும் மூக்குப் பகுதிகளும் உடைப்பட்ட நிலையில் இருக்கும் இரு பிள்ளைகளுக்குத் தாயான Tina Nash, தனக்கு நேர்ந்த இந்த கொடூர தாக்குதலுக்குப் பின்னர் தன்னை உயிருடனே எறித்து விட்டதாகவும் வாழ்வின் கட்டுப்பாட்டு நிலையிழந்து தவிப்பதாகவும் அவர் கலங்கியுள்ளார். 'என் வாழ்க்கை அர்த்தமற்றதாய் போனாலும் என் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைத்துக்கொடுக்க நான் வாழவேண்டுமெனவும் உறுதிமிக்க அத்தாய் கூறியுள்ளார்.

Cornwall காவல் துறை துப்பறிவு அதிகாரி Chris Strickland, நெடுநாள் திட்டத்திற்குப் பின்னர் Jenkin அம்மாதுவை கொடுரமாக தாக்கியிருப்பதாக அறிவித்துள்ளார். அவரின் கருத்துன்படி, Tina மயங்கிய நிலையில் இருந்தபோதுதான் இக்கொடூரத்தை Jenkin செய்திருக்கக் கூடுமென கணிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் Tina-வின் வாழ்நாள் முழுதும் ஒரு இயலாமை நிலையை நினைவூட்டிக்கொண்டேதான் இருக்குமெனவும் அவர் சொல்லியுள்ளார். எனினும், துவண்டுபோகாத அம்மாது பார்வை இல்லையானலும் தன் பிள்ளைகளை நல்முறையில் வளர்த்தெடுப்பதில் முழுமூச்சாய் உள்ளார்.

மேலும், Jenkin-ஐ கண்டுபிடிக்க உதவிய Penzance மற்றும் Hayle-ஐ சார்ந்த பொதுமக்களுக்கு தான் நேரடியாக நன்றி தெரிவிப்பதாகவும் அவர்களின் இபவ்வுதவி அலப்பறியதாக இருந்ததாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டிருந்தார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013) 
Published news:
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)
  ஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு  (07/05/2013)