web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தீவிரவாதிகள் தாக்குதல்! 14 கார் குண்டு வெடிப்பு ஈராக்கில் 37 பேர் சாவு!

[ வியாழக்கிழமை, 19 ஏப்ரல், 2012, ]
தீவிரவாதிகள் தாக்குதல்!
ஈராக்கில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு, மனித குண்டு தாக்குதல்களில் சிக்கி 37 பேர் பலியாயினர்.

ஈராக்கில் மதவாதிகள், பாதுகாப்பு வீரர்கள், உயரதிகாரிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று தீவிரவாதிகள் 6 மாகாணங்களின் பல பகுதிகளில் 14 கார் குண்டு தாக்குதல்கள், 3 மனித வெடிகுண்டு தாக்குதல்கள், 13 வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தினர். மேலும், சில இடங்களில் துப்பாக்கி சூடும் நடத்தி தாக்கினர்.

தலைநகர் பாக்தாத்தில் சுகாதார அமைச்சர் மஜித் ஹமீது அமினை இலக்காக கொண்டு நடந்த கார் குண்டு தாக்குதலில் அவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். நேற்று நடந்த இந்த தாக்குதல்களில் அப்பாவிகள் 22 பேர், 10 போலீசார், 2 ராணுவத்தினர், அல்கய்தா எதிர்ப்பாளர்கள் 3 பேர் உட்பட 37 பேர் பலியாகினர்.

150க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஈராக்கின் பல பகுதிகளில் மார்ச் 20 முதல் இதுவரை நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 255 பேர் காயமடைந்தனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  பாலுறவுகொள்ள மறுத்த காதலனின் ஆணுறுப்பை கடித்த காதலி  (21/05/2013) 
  மேலாடை அணியாமல் பெண்கள் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்: நியூயார்க் போலீஸ்  (21/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
Published news:
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013)
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)