![]() |
டெல்லி அரசு ஆஸ்பத்திரியில் பெண் நோயாளிக்கு முத்தம் கொடுத்ததாக டாக்டர்கள் மீது தாக்குதல் | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல், 2012, ] | ||
டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெயப் பிரகாஷ் அரசு மருத்துவமனைக்கு 16 வயது பெண் நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அவரது உடல் நிலை மோசமாக இருந்ததால் அவசர சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டார். 6 டாக்டர்களை கொண்ட குழு அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர். காய்ச்சல், உடல் வலியை போக்க ஊசி போட்டனர். சிறிது நேரத்தில் அந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டு துடித்தார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடினர்.
டாக்டர்கள் சிலர் அவரது நெஞ்சை பிடித்து அமுத்திவிட, மற்றொரு டாக்டர் அந்த பெண்ணின் வாயில் தனது வாயை வைத்து காற்றை உள்ளே செலுத்தினார். மேலும் சிகிச்சை அளிப்பதற்கும், ஊசி போடவும் வசதியாக அவரது உடலில் இருந்த ஆடைகள் அகற்றப்பட்டன. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் அந்தப் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை. இளம்பெண் இறந்ததை அறிந்ததும் சிகிச்சை முறையை தவறாக புரிந்து கொண்டு, அவருடன் இருந்தவர் டாக்டர்கள் நோயாளியிடம் தவறாக நடந்து கொண்டு கொன்று விட்டனர் என்று கூச்சல் போட்டார். உடனே, வெளியில் இருந்த அந்தப்பெண்ணின் உறவினர்கள் அவசர வார்டுக்குள் நுழைந்து டாக்டர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், வார்டில் இருந்த மருந்து, மாத்திரைகளை அள்ளி வீசினர். டிராலிகளையும், டெலிபோன், வெண்டிலேசன் கருவி போன்றவற்றையும் அடித்து சேதப்படுத்தினர்.
இந்த ரகளையில் சுமார் 25 பேர் ஈடுபட்டதால், ஆஸ்பத்திரி காவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்ததும் ரகளை கும்பல் அடங்கியது. தாக்குதலில் டாக்டர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை கண்டித்து டாக்டர்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
Gallery
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார் (20/05/2013)
|
தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை (20/05/2013)
|
வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது (20/05/2013)
|
மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை! (19/05/2013)
|
கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு (19/05/2013)
|
மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை! (19/05/2013)
|
|
Published news: |
ஜி.ஹெச்ல் குழந்தையை திருடி ரூ.4 லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது (14/05/2013)
|
ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம் (14/05/2013)
|
4 மாத கர்ப்பிணி தாயை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது (14/05/2013)
|
கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி! (13/05/2013)
|
மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்தார்களா? (12/05/2013)
|
காதல் ஜோடி கத்தியால் குத்தி கொண்டு உயிருக்கு போராட்டம் (12/05/2013)
|


Gallery
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்









