web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

திருமலையில் விநாயகர் ஆலயத்தை அகற்றுமாறு சிங்கள பேரினவாதிகள் உத்தரவு!

[ செவ்வாய்க்கிழமை, 24 ஏப்ரல், 2012, ]
திருமலையில் விநாயகர் ஆலயத்தை
தம்புள்ளைப் பள்ளிவாசல் பிக்குகளால் சேதமாக்கப்பட்ட விவகாரத்தையடுத்து, சிறுபான்மையின மக்கள் மத்தியில் எழுந்துள்ள கொதிப்பு தணியும் முன்னரே திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது தமிழ் மக்களின் கலாசார, சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன் இந்து மதத்தையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார் 60 வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார் மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது.

இலங்கை அரசு நாட்டினுள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே, இவ்வாறான செயல்களும் நாட்டில் தமிழ்பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் அரங்கேற்றப்படுகின்றன.

இதனால், தமிழ் மக்கள் கடும் அதிருப்தியடைந்து பொங்கியெழுந்துள்ளனர். தமிழர் கலை, கலாசாரங்களையும், சமய விழுமியங்களையும் அழிக்கும் நடவடிக்கை திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றது என்றும் அவர்கள் விசனமடைந்துள்ளனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013) 
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013) 
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013) 
Published news:
  6 வயது சகோதரனை தினமும் கவனித்து தனித்து வாழும் 9 வயது சிறுவன் வியக்கும் தைரியம்  (12/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)
  இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை!   (09/05/2013)