![]() |
சிங்கக்கொடியை பறித்து உயரத்தில் உயர்த்தி ஆட்டிக் காட்டிய சம்பந்தர் ஐயா ! | ||
| [ புதன்கிழமை, 02 மே, 2012, ] | ||
ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியான வாளுடன் காணப்படும் சிங்கக் கொடியை, பேரினவாதத்தின் அடையாள சின்னமான அக் கொடியை ரணில் கைகளில் இருந்துபறித்து, உயர உயர்திக் காட்டினார் சம்பந்தர் ஐயா அவர்கள் ! தமிழ் மக்களை அடக்கி ஆள நினைக்கும் சிங்கள பேரினவாத அடையாள சின்னமான...
சிங்க கொடியை எரித்ததற்காக எத்தனை இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். திருமலை இந்துக்கல்லூரியில், சிங்கக்கொடி ஏறும்போதே , அது எரிந்து கொண்டு ஏறும்வகையில் அறிவாயுதத்தை பயன்படுத்திய சார்ஸ் அன்டனி பிறந்த மண்ணுக்கு இப்படி ஒரு இழுக்கா ? முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை கொன்றொழித்த சிங்கள இராணுவம் எந்த சிங்க கொடியை வெற்றிக்கழிப்போடு ஏற்றி வைத்ததோ அதே சிங்கள பேரினவாத சிங்க கொடியை இன்று ரணில் விக்கிரசிங்காவுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உயர்த்தி பிடித்திருப்பது கண்டு சிறிலங்காவில் அடக்குமுறைகளுக்குள் வாழும் தமிழ் மக்களும், கல்லறைகளில் வாழும் மாவீரர்களும் கண்ணீர் வடித்திருப்பார்கள்.
அதுவும் சும்மா அல்ல ! ரணில் ஒரு கையாலும், சம்பந்தர் ஒரு கையாலும் சிங்கக்கொடியை பிடித்து அசைத்தனர். பின்னர் அதனை அப்படியே பிடுங்கி தான் தன் இரண்டு கைகளால் அதனை உயர்த்தி அசைத்துக் காட்டினார், சம்பந்தர் ஐயா ! சம்பந்தர் ஐயா அவர்கள், சமீபத்தில் பசில் வீட்டிற்குச் சென்று பா.பி.கியூ(BBQ) உணவு அருந்தினார்.
ஆனால் சிலர் சம்பந்தர் ஐயா அவர்கள் ஒரு வருத்தக்காரர் என்றும் அவர் இறைச்சி சாப்பிடவே மாட்டார் என்றும் கூறினார்கள். காலையில் சிறிதளவு உணவு, மதியம் ஒரு கைபிடி உணவு, இரவில் அவர் சாப்பிடுவதே இல்லை. அவரால் கடுமையான வேலைகள் எதனையும் செய்யமுடியாத அளவு பலவீனமாக இருக்கிறார். இப்படியான பலவீனமான மனிதரைப் பற்றி ஏன் ழுதுகிறீர்கள் ? என்று கேள்விகள் எழுப்பினர் பலர்.
ஆனால் சிங்கக் கொடியை பறித்து அதனை உயர உயர்த்தி ஆவேசத்தோடு அசைக்க மட்டும் இவருக்கு தெண்பு இருக்கிறதா ? சம்பந்தர் ஐயா சிங்கக் கொடியை உயர்திப் பிடித்த படத்தை தவிர்த்து ஏனைய படங்களை, தமிழ் இணையங்கள் பல பிரசுரித்துள்ளன. ஆனால் உண்மை நிலையை தெரியப்படுத்த அவை ஏன் தயங்குகின்றன ? இவர்கள் தான் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுத்தரப்போகிறார்களா ? |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது! (20/05/2013)
|
|
Published news: |
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு- (16/05/2013)
|
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|


மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -









