web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பொலிகண்டியில் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி தற்கொலை!

[ வெள்ளிக்கிழமை, 04 மே, 2012, ]
பொலிகண்டியில் புலிகளின்
வடமராட்சியின் பொலிகண்டிப் பாலாவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார் எனதெரிவித்துள்ளார். 38 வயதுடைய சிவலிங்கம் சுகந்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால மூத்த பெண்போராளியாக இருந்த இவர் 1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளான இவர் இடுப்பின் கீழ் செயலிழந்த நிலையில் காணப்பட்டார். எனினும் 2009 ஆம் ஆண்டுவரை விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட இவர் மே 17ன் பின் படையினரால் கைது செய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு அண்மையிலேயே விடுவிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இந்நிலையில் பொலிகண்டி பாலாவிப் பகுதியில் உள்ள மீள் குடியேற்ற மக்களுக்கான முகாம் ஒன்றில் தனது பெற்றோருடன் இவர் வாழ்ந்து வந்தார். நேற்றைய தினம் வீட்டின் அறையை பூட்டிக் கொண்ட இவர் தனக்குத் தானே மண் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீமூட்டி இறந்துள்ளார். இவரது சடலம் மந்திகைப் பொலிசாரால் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் போராளிகள் பலர் அண்மைக்காலமாக மன உளைச்;சல்கள் காரணமாக சாவைத் தழுவிக் கொள்ளும் பரிதாபகரான நிலை தொடர்வதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு   (23/05/2013) 
  கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!  (23/05/2013) 
  பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  (23/05/2013) 
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
Published news:
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013)
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013)
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013)
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013)
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)