![]() |
ஒபாமாவின் முதல் மனைவி பற்றிய பரபரப்புத் தகலவல்கள்! | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 06 மே, 2012, ] | ||
அமெரிக்க ஜானாதிபதி பராக் ஒபாமா குறித்த புதிய சுயசரிதை புத்தகம் அடுத்த வாரம் வெளிவருகின்றது. இப்புத்தகத்துக்கு பராக் ஒபாமாவின் கதை என்று பெயர்.வோஷிங்ட்ன் போஸ்ட் பத்திரிகை நிருபர் டேவிட் மரனிஸை கொண்டு ஒபாமா இந்நூலை எழுதுவித்து இருக்கின்றார்.
இந்நூல் குறித்த விடயங்கள் உலகப் பத்திரிகைகள் மற்றும் இணையத் தளங்கள் ஆகியவற்றில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஏனென்றால் ஒபாமாவின் இளமைக் கால காதல்கள் குறித்து இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஒபாமாவின் அந்நாள் காதலிகள் குறைந்தது இருவர் குறித்து இதில் சொல்லப்பட்டு இருக்கின்றது. இருவருடனும் டேட்டிங் வைத்திருக்கின்றார். ஒருத்தியின் பெயர் Alex McNear. ஒபாமா கொலம்பியாவுக்கு செல்கின்றமைக்கு முந்திய காலம். Occidental கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் Alex McNear ஐ சந்தித்து இருக்கின்றார். மற்றையவர் Genevieve Cook. இவர் ஆஸ்திரேலிய இராஜதந்திரி ஒருவரின் புதல்வி. ஒபாமாவுக்கு அப்போது வயது 22. 1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூயோர்க்கில் உள்ள East Village என்கிற இடத்தில் வைத்து கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஒன்றின்போது Genevieve Cook ஐ முதன்முதல் சந்தித்து இருக்கின்றார் ஒபாமா. அன்றுதான் ஒபாமாவின் சீரியஸான ரொமான்ஸ் ஆரம்பம் ஆகின்றது. Genevieve Cook இற்கு வயது 25. அதாவது ஒபாமாவை விட மூன்று வயது அதிகம்.அந்த வருடமே இருவரும் ஒன்றாக டேட்டிங் நடத்தி இருக்கின்றார்கள்.
ஒவ்வொரு வியாழன் இரவுகளிலும் வார இறுதி நாட்களிலும் தவறாமல் சந்திக்கலாயினர். காதல் வளர்ந்தது. ஒபாமாவுடன் வெகு விரைவிலேயே செக்ஸ் வைத்துக் கொண்டார். இவர்களின் உறவு 1985 ஆம் ஆண்டு மே மாதம் முறிவடைந்தது. இடைப்பட்ட காலங்களில் சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றனர். ஒபாமா Manhattan என்கிற இடத்தில் சிறிய மாடி வீடு ஒன்றில் வசித்து வந்திருக்கின்றார். அவ்வீட்டுக்கும் இக்காதலி சென்று இருக்கின்றார். ஒபாமா மீது வைத்திருந்த காதலை உணர்வு பூர்வமாக டயரியில் எழுதிக் குவித்து இருந்தார் Genevieve Cook. இளம் ஒபாமாவின் காதல்-ஒரு காதலியின் இரகசிய டயரி என்கிற தலைப்பில் ஒபாமாவின் புதிய சுயசரிதையில் இவை இடம்பிடித்து இருக்கின்றன. ஒபாமா அந்நாட்களில் எதிர்காலத்தை கட்டியமைக்க மிகுந்த கஷ்டப்பட்டு இருக்கின்றார் என்பதும் கறுப்பர் என்கிற காரணத்தால் ஏராளமான இன்னல்களை எதிர்கொண்டு இருக்கின்றார் என்பதும் இந்த டயரிக் குறிப்பில் எழுதப்பட்டு இருக்கின்றன. ஒபாமாவுக்கு பிடித்தமான விடயங்கள், ஒபாமாவின் பழக்க வழக்கங்கள் ஆகியனவும் எழுதப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக நீண்ட துணியிலான ஒரு வகை உடையை அணிந்து கொண்டு அந்நாட்களில் ஒபாமா ஊர் சுற்றுகின்றமை வழக்கம் என்றும் ஒபாமாவுக்கு கோப்பி என்றால் நன்கு பிடிக்கும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்றமையால் மாதாந்த கொடுப்பனவை வெட்டிய அவுஸ்திரேலிய நிறுவனம் (18/06/2013)
|
நண்பனின் தாயுடன் பாலுறவுகொண்டு தந்தையான 11 வயது சிறுவன் (17/06/2013)
|
|
Published news: |
எனக்கு இந்தியாவில் அகதி அந்தஸ்து கிடைக்கவில்லை : ஜூலியன் அசாஞ்ச்! (13/06/2013)
|
பாகிஸ்தானில் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் விமானி! (13/06/2013)
|
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் வரலாற்றில் களிமண்தரை மன்னன் நடால் சாதனை (11/06/2013)
|
அமெரிக்காவில் 4 வயது பையன் தகப்பனை சுட்டுக்கொன்றான்! (09/06/2013)
|
குறைகளை தெரிவித்த இந்திய தொழிலாளர்களுக்கு சவூதியில் அடி உதை (09/06/2013)
|
மது போதையில் குழந்தையை குத்தி கொன்ற பெண் (09/06/2013)
|


அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்றமையால் மாதாந்த கொடுப்பனவை வெட்டிய அவுஸ்திரேலிய நிறுவனம்









