![]() |
வெளிநாட்டு ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 06 மே, 2012, ] | ||
தமிழர் தாயகத்தில் வெளிநாட்டு ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பு
யாழ்.மாவட்டம் உட்பட தமிழர்; தாயகத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டுஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் செய்வதறியாத நிலையில் திகைத்துப் போயுள்ளனர். இவ்வாறான மோசடிப் பேர்வழிகளிடம் இழந்த பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மீளப்பெறுவதற்கு வழி தெரியாமல் சிறீலங்கா பொலிஸ் நிலையங்களையும் நீதிமன்றங்களையும் நாடிச்செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வெளிநாட்டுப் பட்டப்;படிப்பு என்ற பெயரில் யாழ்.மாவட்ட இளைஞர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் தனக்கும் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.அரச அதிபர் இவ்விடயத்தில் இளைஞர்கள் அவதானமாக இருக்கவேண்டுமென்று தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் முன்னர் பணியாற்றிய ஒருவர் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி பலரிடம் நிதிமோசடி செய்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மட்டக்களப்பு அக்கரைப்பற்றைச் சேர்ந்த அஸ்மி கபூர் என்ற நபர் யாழ்.மாவட்ட இளைஞர், யுவதிகளிடம் நிதிமோசடி செய்தமை அம்பலமாகியுள்ளது. ஐரோப்பியன் பட்டப்படிப்புக் கல்லூரி என்ற பெயரில் திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் அலுவலகமொன்றைத் திறந்த இவர் இங்கு வைத்துப் பல இலட்சக்கணக்கான ரூபாய்களைச் சுருட்டியுள்ளார். அக்கரைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் என்று கூறப்படும் இவர் தற்போது மேற்படி அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக இவரிடம் பணத்தைக் கொடுத்த மாணவர்கள் கூறுகின்றனர். வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மேற்படி நபர் குறித்து யாழ்.அரச அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த அஸ்மி கபூர் என்ற நபர் தன்னிடமிருந்து 6 இலட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த அஸ்;;மி கபூர் என்பவர் தன்னிடமும் தனது மைத்துனரிடமிருந்து 10 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளார் என்று கைதடி தெற்கைச் சேர்ந்த ச.சிந்துஜன் என்ற இளைஞரும் அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தனது தம்பியை வெளிநாட்டுப் பட்டப்படிப்புக்கு அனுப்புவதற்காக தமது குடும்பத்திடமிருந்த தங்க நகைகளை அடகு வைத்து 5 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பணத்தை தான் வழங்கியதாக அவர் கூறியுள்ளார். மேலும் தனது மைத்துனரும் தனது மகனைப் பட்டப்படிப்புக்கு வெளிநாடு அனுப்புவதற்காக 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவை அஸ்மி கபூரிடம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று இவர் மேலும் பல இளைஞர்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இதே போன்று கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக்கூறி இலட்சக்கணக்கான ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்;ளார். மேலும் திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் சேவாலங்கா நிறுவனத்தில் தான் வேலை செய்வதாகவும் வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்ப முடியுமென்றும் கூறி யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்களிடம் பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு திருகோணமலைக்கு தப்பிச் சென்றுள்ளார். அவரை நம்பி பணம் வழங்கியவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதாகத் தெரிவித்துள்ளனர். யாழ் குடாநாட்டில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றமை குறித்து அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளிவருகின்ற போதிலும் இது குறித்து அலட்டிக்கொள்ளாத இளைஞர்கள் மோசடிக் கும்பலிடம் தொடர்ந்தும் பணத்தைக்கொடுத்து ஏமாந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் வெளிநாட்டுப் பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கும் பதிவு செய்யப்பட்ட பல நிறுவனங்கள் இயங்குகின்ற போதிலும் தமது பணத்தை மோசடிக்கும்பலிடம் இழக்கின்ற இளைஞர்கள் இனிமேலாவது விழிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் மேற்படி சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
புத்தபிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை! (24/05/2013)
|
தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு (23/05/2013)
|
கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி! (23/05/2013)
|
பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை (23/05/2013)
|
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|


புத்தபிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை!









