![]() |
மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு | ||
| [ சனிக்கிழமை, 12 மே, 2012, ] | ||
அவுஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் அருங்காட்சியகத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவு பகுதியில் மீனவர் வலையில் கிளாட் வகையை சேர்ந்த ராட்சத நண்டு கடந்த மாதம் சிக்கியது. அவுஸ்திரேலியாவில் எந்த வகை நண்டு கிடைத்தாலும் உடனே சமைப்பதற்குத் தான் போகும். உணவு விடுதிகளிலும் அமோக விளம்பரத்துடன் நண்டுக் கறிகள் விற்பனையாகும்.
ஆனால் இதைப் பிடித்த மீனவர் அதை கறிக்கு விற்காமல் பத்திரமாக வைத்திருந்து, கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் ‘ஸீ லைஃப்’ என்ற அமைப்பிற்கு ரூ.2.58 லட்சத்திற்கு கொடுத்து விட்டார். இது இங்கிலாந்தின் டார்செட் கவுன்டியில் உள்ள வேமோத் ஸீ லைஃப் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இதற்காக 10 அடி உயரம், 6 அடி அகலத்துக்கு பிரத்யேக கண்ணாடி பெட்டி தயார் செய்து, அதில் நண்டை போட்டு விமானத்தில் லண்டனுக்கு எடுத்து சென்றுள்ளனர். இது கூடவே டாஸ்மேனியா தீவு பகுதியில் பிடிபட்ட மற்ற 2 நண்டுகளில் ஒன்று பர்மிங்காமுக்கும், மற்றொன்று பெர்லினுக்கும் அனுப்பப்பட உள்ளன. இதுகுறித்து ஸீ லைஃப் அமைப்பின் அதிகாரி ராப் ஹிக்ஸ் கூறிகையில், டாஸ்மேனியா பகுதியில் கிளாட் வகையை சேர்ந்த ராட்சத நண்டுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அங்கு நண்டு உணவும் பிரசித்தம் பெற்ற காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது பிடிபட்டிருக்கும் இந்த ராட்சத நண்டு சுமார் 6.8 கிலோ எடை, 15 இன்ச் நீளம் இருக்கும் இந்நண்டு, வழக்கமான கடல் நண்டினை விட 100 மடங்கு பெரிது. இது இன்னும் வளரக்கூடிய இந்த நண்டு, முழு வளர்ச்சியின் போது இதன் எடை 14 கிலோ வரை இருக்கும். ஜப்பானின் ஸ்பைடர் வகை நண்டிற்கு அடுத்தபடியாக, உலகிலேயே 2வது பெரிய நண்டு கிளாட்தான். இறால், சிறிய வகை நண்டு, சிப்பி மீன் ஆகியவற்றை விரும்பி உண்ணும் இவை பிடிபட்ட இரையை நொறுக்கி உண்ணும் வகையில் மிகப் பெரிய கொடுக்குகளைக் கொண்டுள்ளது. இது தவிர அதிக சக்தி கொண்ட சிறிய கொடுக்குகளும் உண்டு. கொடுக்கு மட்டுமே 3.5 இன்ச் நீளம் உள்ளவை. உடைந்தால் மீண்டும் வளரும். உணவை அரைக்கும் பற்கள், இதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகள் இடும் என்றாலும் பெரும்பாலானவை இதர கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாகிவிடும். இதனால், ஒன்றிரண்டு மட்டுமே முழு வளர்ச்சி அடையும். இதன் முழு ஆயுட்காலம் 20 ஆண்டுகள். அவுஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் 29 மணி நேரம் பயணித்து இங்கிலாந்துக்கு வந்திருக்கிறது. அதிக நேர விமான பயணத்தால் ஏற்படும் ‘ஜெட்,லேக்’ காரணமாக சில நாட்கள் சரியாக சாப்பிடாமல் இருந்த இந்நண்டு தற்போது வழக்கம் போல் சாப்பிட ஆரம்பித்துவிட்டது என்று கூறியுள்ளார்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர் (19/05/2013)
|
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
தண்ணீர் தொட்டியில் தாளம் போடுவது தவறா?... (16/05/2013)
|
|
Published news: |
அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர் (13/05/2013)
|
இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம் (13/05/2013)
|
உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம் (12/05/2013)
|
விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி (11/05/2013)
|
30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா (10/05/2013)
|
11 வருடங்களில் 5 ஆயிரம் பூச்சி இனங்களை உண்ட ஆசிரியர் (09/05/2013)
|



காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்









