web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவதற்கு முன் அரசுடன் பேச ஆசைப்படுகிறது கூட்டமைப்பு!

[ திங்கட்கிழமை, 14 மே, 2012, ]
பாராளுமன்ற தெரிவுக் குழுவில்
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவதற்கு முன்னர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி சில இணக்கப்பாட்டிற்கு வர விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவதற்கு முன்னர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி சில இணக்கப்பாட்டிற்கு வர விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் தீர்வு விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் முறிவடைந்தது. அதற்கு பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் என்ற கோரிக்கையை அரசு தரப்பு நிராகரித்தமையாகும். எனினும் பொலிஸ் அதிகார விடயம் குறித்து பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பேசப்படும் என மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கம் தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சேர்வதற்கு முன்னர் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. "பாராளுமன்றத் தெரிவுக் குழு பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர் அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பன்முகப் பேச்சுவார்த்தை என்பது பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு வழிசெய்வதற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் நுட்பம் என சுரேஸ் எம்பி குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெறச் செய்வது அரசாங்கத்தின் மற்றுமொரு தந்திரோபாயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் தீர்வொன்றை காண பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கடந்த வாரம் அழைப்பு விடுத்ததோடு அதற்கு மத்தியஸ்த்தம் வகிக்கத் தான் தயார் எனவும் தெரிவித்திருந்தார். இதேவேளை, இலங்கை வந்து சென்ற இந்திய எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா ஸ்வராஜ்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு கோரியிருந்ததார். எனினும் கூட்டமைப்பு அவை அனைத்தையும் நிராகரித்துவிட்டு தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

Published news:
  சரத் பொன்சேகா ஒருபோதும் அரசுக்கு சவாலாக அமையமாட்டார் - இப்படிக் கூறுகிறார் அமைச்சர் விமல்  (21/05/2012)
  நான்காம் ஈழப்போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஷ மாற்றியமைத்தார்  (16/05/2012)
  திருடப்பட்ட தொலைபேசி, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் 12 மணித்தியாலயத்திற்குள் கண்டுடிப்பு  (16/05/2012)
  முறைப்பாடுகளுக்கான பிரதியை அவ்விடத்திலேயே வழங்க நடவடிக்கை  (16/05/2012)
  புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை வழங்க பிலிப்பைன்ஸ் இணக்கம்  (15/05/2012)
  நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் த.தே.கூ. பங்குபற்றுவதற்கான யோசனைத்தொகுதி அரசாங்கத்திடம் ஐ.தே.க. கையளிப்பு  (15/05/2012)