web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கருணா என்ற முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் ஆகியோருக்காக இராணுவத்தினர் பிரசாரம்

[ புதன்கிழமை, 16 மே, 2012, ]
கருணா என்ற முரளிதரன் மற்றும்
கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்காக இராணுவத்தினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக ,

தெரிவருகிறது. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக வாகரையில் மக்களின் வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தி, கருணா மற்றும் பிள்ளையானுக்கு வாக்களிக்குமாறு அச்சுறுத்தி, வாக்குகளை அளிக்க வேண்டும் என மக்களிடம் உறுதிமொழிகளை பெற்று வருவதாகவும் மக்களின் வாக்குறுதியை உறுதிப்படுத்துவதற்காக இராணுவத்தினர் தாம் கொண்டு செல்லும் பதிவேடுகளில் பெயர், விலாசங்களுடன் கையெழுத்துக்களை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி கேள்விப்பட்ட பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அது குறித்து இராணுவ அதிகாரிகளிடம் கேட்ட போது, கிழக்கு மாகாண சபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், தாம் இவ்வாறு மக்களை தெளிவுப்படுத்தி வருவதாக கூறியுள்ளனர். அத்துடன் அரசாங்கமும், இராணுவத்தினருமே போரை முடிவுக்கு கொண்டு வந்ததால், இவ்வாறு மக்களுக்கு தெளிவுப்படுத்தும் உரிமை இருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன் போது, சாதாரண உடையில் காணப்பட்ட இராணுவப் புலனாய்வு பிரிவினர் என சந்தேகிக்கப்படும் சிலர் நாடாளுமன்ற உறுப்பினருடன் மோதலை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கருணா, விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்டு வந்ததுடன், பிள்ளையான், விடுதலைப்புலிகளின் சிறுவர் படையணிக்கு பொறுப்பாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
  வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு!  (20/05/2013) 
  வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்   (20/05/2013) 
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
Published news:
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)