![]() |
தெளிவான வரைபை எதிர்பார்த்திருக்கும் அமெரிக்கா! குறைவான எதையும் ஏற்றுக் கொள்ளாதாம்!! | ||
| [ வியாழக்கிழமை, 17 மே, 2012, ] | ||
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான வரைபு ஒன்றுக்கு குறைவான எந்தவொரு திட்டத்தையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் நியுயோர்க் செய்தியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை நாளை சந்திக்கவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இதுகுறித்து வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா குழுவிடம் இருந்து தெளிவானதொரு தீர்வை தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்குக் குறைவான எதையும் அவர்களிடம் இருந்து வாங்கமாட்டோம் என்றும் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் குறித்து ஆர்வம் கொண்டுள்ள சில செல்வாக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறியுள்ளதாகவும், அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே வெளிவிவகாரக் குழுவில் அங்கம் வகிக்கும் அமெரிக்க செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்தவாரம் சந்தித்த அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கைக் குழுவினர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தை சிறிலங்கா நடைமுறைப்படுத்த, பீரிசிடம் அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அத்துடன் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுதியாக முடிவெடுக்கும்படி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்துமாறு கோரும் கடிதம் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க தமிழ் அரசியல் நடவடிக்கை குழு அனுப்பி வைத்துள்ளது. அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக இறுக்கமாகப் பேச வேண்டும் என்று அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் ஹிலாரி கிளின்ரனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
சினிமா மோகத்தில் இலங்கை மண்ணில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்ப்பெண்ணூக்கு நேர்ந்த கொடுமை (19/06/2013)
|
போதையில் நிர்வாணமாக குளித்த இரு இளம் பெண்கள் கைது! (19/06/2013)
|
உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பு வசமுள்ள திருமலை நகர சபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் (19/06/2013)
|
இரண்டாக பிளந்த குழந்தையின் ஆண் உறுப்பு -சத்திரசிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு சாதனை (19/06/2013)
|
கொழும்பு பல்கலை கட்டிடத்திலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு (18/06/2013)
|
13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தமும் செய்யவேண்டியதில்லை: எதிர்க்கட்சிகளின் கூட்டு (17/06/2013)
|


சினிமா மோகத்தில் இலங்கை மண்ணில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்ப்பெண்ணூக்கு நேர்ந்த கொடுமை









