web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

விடுதலைப் புலிகளை தோற்கடித்தது எப்படி?: இந்திய மாணவர்களுக்கு கற்பிக்கவுள்ளார் மகிந்த பாலசூரிய

[ திங்கட்கிழமை, 21 மே, 2012, ]
விடுதலைப் புலிகளை தோற்கடித்த
இலங்கையில் முப்பதாண்டு காலம் போரை நடத்திய விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது எவ்வாறு என்பதனை, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளபல்கலைக்கழக மாணவர்களுக்கு, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய பாடம் நடத்தவுள்ளார்.

வடோதராவில் உள்ள மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரிய, இந்தப் பாடத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு இவர், தீவிரவாத முறியடிப்பு மற்றும்

னைத்துலக விவகாரங்கள் குறித்து ஒன்று அல்லது இரண்டு பாடங்களை கற்பிக்கவுள்ளார். இதன்போது, விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தனது அனுபவங்கள் குறித்தே அவர் முக்கிய கவனம் செலுத்துவார்.

மகிந்த பாலசூரிய இந்தப் பல்கலைக்கழகத்தில் 1976ஆம் ஆண்டில் விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ரஸ்யாவின் சென்.பீற்றர்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான பீடத்தில் கலாநிதிப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

கலாநிதிப் பட்டத்துக்காக தான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை அடிப்படையாக வைத்து, மகிந்த பாலசூரிய ‘விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்‘ என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு   (23/05/2013) 
  கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!  (23/05/2013) 
  பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  (23/05/2013) 
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
Published news:
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013)
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013)
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013)
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013)
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)