![]() |
சரத் பொன்சேகா ஒருபோதும் அரசுக்கு சவாலாக அமையமாட்டார் - இப்படிக் கூறுகிறார் அமைச்சர் விமல் | ||
| [ திங்கட்கிழமை, 21 மே, 2012, ] | ||
சிறையிலிருந்து விடுதலையான சரத் பொன்சேகா அரசுக்கு ஒருபோதும் சவாலாக அமையமாட்டார் என அரசின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி சூளுரைத்துள்ளது. "அரசியலில் ஒரு சிறு அதிர்வு ஏற்பட்டாலும் எதிர்க்கட்சிகள் பெரும் பூகம்பம் ஏற்பட்டது போல் நிலைகுலைந்து போய்விடுகின்றன. அது அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாகவும் அமையும். எது எவ்வாறிருப்பினும், சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து அரசு அலட்டிக்கொள்ளத் தேவைவையில்லை" - என்று தேசிய சுதந்திர முன்னணியைச் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"சரத் பொன்சேகா அரசிற்குச் சவாலாக இருப்பாரென்றால் அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலேயே இருந்திருப்பார். ஆனால் இனிமேல் அவரால் அரசுக்கு எந்தச் சவாலும் ஏற்படாது.
சரத் பொன்சேகா விடுதலையானது அரசியல் களத்தில் பல எதிரும்,புதிருமான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் அச்சத்தில் ஆழ்ந்துபோயுள்ளன. இது விடயம் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், சரத் பொன்சேகா அரசிற்கு ஒருபோதும் சவாலாக அமையமாட்டார்" - என்றார்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |

.jpg)
நான்காம் ஈழப்போர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை பசில் ராஜபக்ஷ மாற்றியமைத்தார்









