web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தனி மாவட்டக் கோரிக்கையை முன்வைத்தே கிளிநொச்சியை தனி மாவட்டமாகப் பிரித்தேன்:வீ.ஆனந்தசங்கரி

[ செவ்வாய்க்கிழமை, 22 மே, 2012, ]
தனி மாவட்டக் கோரிக்கையை
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியை பிரதான நோக்கமாகக் கொண்ட நான் இத்தொகுதியின் எம்.பி.யாக இருந்த வேளை தனிமாவட்டக் கோரிக்கையை முன்வைத்து யாழ்.மாவட்டத்துடன் இருந்த கிளிநொச்சியை தனி மாவட்டமாக பிரித்தேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் கிளிநொச்சி தொகுதி எம்.பி.யுமான வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டார்.

கிளிநொச்சி நகரில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தந்தை செல்வா நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த சமகால சமூக, பொருளாதார புனர்வாழ்வு, கல்வி அபிவிருத்திக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையற்றுகையில் முன்னாள் எம்.பி. வீ.ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தந்தை செல்வா நற்பணி மன்றத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தமர்வில் பெருமளவு இளைஞர,; யுவதிகளும் சமூக ஆர்வலர்களும் பங்குகொண்டனர். தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் மேலும் பேசுகையில், தனி மாவட்டம் உருவாகுவதன் மூலம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் மருத்துவபீடம் சென்று முதல் தடவையாக மருத்துவர்களானார்கள். அதேபோல் பொறியியலாளர்களாகவும் வர்த்தகம், சட்டம், கலைத்துறை சார்ந்தவர்களாகவும் விளங்கி வருகின்றனர்.

இவ்வாறான கிளிநொச்சி மாவட்டம் அண்மையில் வெளியான க.பொ.த.சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் இறுதி இடத்தைப் பெற்றுள்ளது கவலை தருகிறது. இப்பரீட்சை முடிவின் பிரகாரம் கிளிநொச்சிப் பகுதி பாடசாலை ஒன்றில் இரு மாணவர்கள் ஒரு பாடத்தில் தானும் சித்தியடையாது சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த நிலையில் மாற்றம் வர அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு கல்வியில் எமது மாவட்டம் அபிவிருத்தி காண வேண்டும்.

இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியேறி வீட்டு வசதிகள், மலசலகூடப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கல்வித் தேவைகள் நிறைவேறாமை போன்ற காரணங்களாலும் மாற்றுவலுவுள்ளவர்களாலும் பாதிப்புகள் அதிகரித்துச் செல்கின்றன. புனர்வாழ்வு நடவடிக்கைகள் சரிவர செயற்படுவதைக் காண முடியவில்லை. அண்மையில் பிரான்ஸ் தூதுவர் கிளிநொச்சிக்கு வந்த போது பாதிக்கப்பட்ட மக்களது நல்வாழ்விற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன். அவரும் சில உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளார்.

கடந்த வன்னி யுத்த காலத்தில் நான் இரு தரப்பினரையும் யுத்தத்தை நிறுத்துமாறு தான் கோரினேன். இவ்வாறு யுத்தம் நிறுத்தப்பட்டிருந்தால் பெருமளவானோர் பலியாகாமல் பாதுகாத்திருக்க முடியும் என்றும் குறிபிட்டார். இந்நிகழ்வில் தந்தை செல்வா நற்பணி மன்ற செயலாளர் ச.ராஜன்,
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)