![]() |
இனப்பிரச்சினைக்காக வழங்கப்படுகின்ற தீர்வு ஏட்டில் மட்டுமே இருக்கக்கூடாது - சரத் பொன்சேக்கா | ||
| [ சனிக்கிழமை, 26 மே, 2012, ] | ||
இனப்பிரச்சினைக்காகன தீர்வை எழுத்து மூலம் வைத்துக்கொண்டு சர்வதேசத்தையும் மக்களையும் ஏமாற்றக் கூடாது எனவும் நிதானமாக சிந்தித்து, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வை கட்டாயமாக முன்வைக்க வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கில் மிதமிஞ்சிய இராணுவத்தினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கை சிவில் நிர் வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கின்றபோது ஏனைய பிரிவினருக்கு போன்று புனர்வாழ்வு அளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல.
இரு இனங்களுக்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். அதுவே எனது பாரிய எதிர்பார்ப்பாகும். எனது பார்வையில் சிறுபான்மை இன மக் கள் என்றொரு பிரிவினர் நாட்டில் இல்லை. சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் சமத்துவமாக வாழக்கூடிய சூழலை உருவாக்களூவண்டும்.அதுவே எனது எதிர்பார்ப்பாகும்.
அதனை நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.அத்தீர்வு எழுத்து வடிவில் இல்லாமல், நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அதன் மூலம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண
ப்படவேண்டும். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. வழங்கப்படுகின்ற தீர்வு ஏட்டில் மட்டுமே இருக்கக்கூடாது. தமிழ்,முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தீர்வு அமைய வேண்டும். இனங்களுக்கு இடையில் நம்பிக்கையையும் விவாத்தையும் கட்டியெழுப்பவேண்டும். அது முக்கியமானதாகும் எனவும் சரத் பொன்சேக்கா கூறியுள்ளார். கொழும்பில் வெளியாகும் தமிழ் தினசரிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
|
Published news: |
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு- (16/05/2013)
|
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|


மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!









