![]() |
எயிட்ஸ் நோயினால் கைதி மரணம்: சக கைதிகளுக்கு ரத்தப்பரிசோதனை ! | ||
| [ செவ்வாய்க்கிழமை, 29 மே, 2012, ] | ||
அண்மையில் கொழும்பு விளக்கமறியல் சிறையில் எயிட்ஸ் நோயினால் கைதி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருடன் தங்கியிருந்த சக கைதிகளின் இரத்த மாதிரியைபரிசோதனை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கொழும்பு விளக்கமறியல் சிறை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி தாக்கல் செய்த அறிக்கை ஒன்றை இன்று (29) பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் சோஹன்சா ரணசிங்க இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.
கடந்த மார்ச் 11ஆம் திகதி உயிரிழந்த கொழும்பு விளக்கமறியல் சிறை கைதி எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவர் என்பது நீதிமன்ற வைத்திய அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் குறித்த கைதியுடன் இருந்த சக கைதிகளின் இரத்த மாதிரியை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் எனத் தெரிவித்த நீதிமன்றம், பரிசோதனை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு கொழும்பு விளக்கமறியல் சிறை அதிகாரிக்கு உத்தரவிட்டது. மேலும் இது குறித்து ஆய்வு செய்யுமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைக்குப் பொறுப்பான சுகாதார அதிகாரிக்கு பணிப்பு விடுத்துள்ள நீதிமன்றம் அவரை எதிர்வரும் 5ம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி அழைப்பு விடுத்துள்ளது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது! (20/05/2013)
|
வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு! (20/05/2013)
|
வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர் (20/05/2013)
|
யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு ! (19/05/2013)
|
|
Published news: |
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|


திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை









