web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பிரித்தானிய நாளேட்டின் கையில் இலங்கைப் படைகளின் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள்

[ புதன்கிழமை, 06 யூன், 2012, ]
பிரித்தானிய நாளேட்டின்
போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படைகளால் தமிழர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான மேலதிகமான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் தமக்குக்கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டன்ட்‘ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

தி இன்டிபென்டன்ட் நாளேட்டிற்கு கிடைத்துள்ள காணொளி ஒன்று. வேண்டுமென்றே மார்பகங்கள் மற்றும் பாலுறுப்புக்கள் வெளித்தெரியத்தக்கதாக ஆடைகள் களையப்பட்ட நிலையில் டசின் கணக்கான பெண்கள் உள்ளிட்ட 100ற்கும் அதிகமான தமிழர்களின் பிணக்குவியலின் முன்பாக இலங்கைப் படையினர் களிப்புடன் நிற்பதைக் காட்டுகின்றது.

இது தமிழர்கள் எந்தளவிற்கு சித்திரவதை செய்யப்பட்டுநீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்தக் காணொளி இலங்கைப் படையினர் வழமையாகப் பயன்படுத்தும் இணையநிலையம் ஒன்றில் பணியாற்றும் ஒருவரால் தி இன்டிபென்டன்ட் நாளேட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காணொளி தமிழர்கள் இறந்த பின்னரும்எவ்வாறு இலங்கைப் படையினரால் நடத்தப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

கறுப்பு வெள்ளையிலான கைத்தொலைபேசிப் படங்கள் தார்ப்பாய்களின் மீது 100ற்கும் அதிகமான சடலங்கள் போடப்பட்டு்ள்ளதை காட்டுகின்றன. இவற்றில் சில ஆண்களின் சடலங்கள் விடுதலைப்புலிகளின் சீருடையில் காணப்படுகின்றன. பெரும்பாலான சடலங்கள் சாதாரண உடையில் காணப்படுகின்றன.

இவை போராளிகள் அல்லது பொதுமக்களா அல்லது இருதரப்பினருடையதுமா என்று சொல்வது சாத்தியமில்லை. விடுதலைப்புலிகள் பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேவேளை இலங்கைப் படையினர் பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதலை நடாத்தியிருந்தனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர்   (25/05/2013) 
  யாழில் வெசாக் பண்டிகை, பெருவிருப்புடன் தமிழர் பங்கேற்பு!   (25/05/2013) 
  புத்தபிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை!   (24/05/2013) 
  தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு   (23/05/2013) 
  கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!  (23/05/2013) 
  பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  (23/05/2013) 
Published news:
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013)
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013)
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013)
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013)
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013)
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013)