web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

புலிகளே கனேடியப் பிரஜையைக் கொன்றனர்: த ஐலன் பத்திரிகை !

[ சனிக்கிழமை, 09 யூன், 2012, ]
புலிகளே கனேடியப் பிரஜையைக்
கடந்த மே மாதம் கனடாவில் இருந்து இலங்கை சென்று கிளிநொச்சியில் தங்கியிருந்த மகேந்திரராஜா அந்தோணிப்பிள்ளை மிகமோசமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். மே 3ம் திகதி கொல்லப்பட்ட இவரது கைகளில் காணப்பட்ட மணிக்கூடு, கொலை நடந்த நேரத்தை துல்லியமாகக் காட்டுகிறது என்ற செய்தியை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. கிளிநொச்சியில் வியாபார முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இவருக்கு சுமார் 8 கடைகள் உள்ளது. இதனை இலங்கை இராணுவம் கையகப்படுத்தி, அதனை காகில்ஸ் என்னும் நிறுவனத்துக்கு விற்பனை செய்யவிருந்தது. இக் கடைகளை திரும்பப்பெறச் சென்ற மகேந்திரராஜாவை இலங்கை அரச படைகள் கொன்றனர் என்று நம்பப்படுகிறது. ஆனால் விடுதலைப் புலிகளே இவரைக் கொன்றதாகவும் அதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் நேற்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்றைய தினம் கனேடிய அரசின் தூதுவரிடம் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் தான் கருத்து எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை எனத் தூதுவர் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த முன்நாள் போராளி அகிலன்(27) அறிநியா எனப்படும் சிங்களவர் உட்பட ஐவர் கைதாகியுள்ளனர். இவர்கள் அனைவரையும் கிளிநொச்சி நீதவான் முன்நிலையில் ஆஜர்படுத்திய பொலிசார், அறிநியா என்பவர் அரச படையில் இருந்து தப்பியோடியவர் என்று கூறியுள்ளனர். இருப்பினும் அகிலனே கொலையைப் புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இறந்துபோன மகேந்திரராஜா அந்தோணிப்பிள்ளையின் மடிக்கணணியும்(லப்-டொப்) மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன காணமல் போயிருந்தது. அதனை தாம் தற்போது கைப்பற்றியிருப்பதாகவும், அவை அனைத்தும் அகிலனிடம் இருந்து எடுக்கப்பட்டதாகவும் பொலிசார் கூறியுள்ளனர். கொலையை தாமே புரிந்துவிட்டு, குற்றச்சாட்டுகளை முன்நாள் புலிகள் உறுப்பினர்கள் மீது சுமத்தி, அரச படைகள் இலகுவாகத் தப்பித்துக்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிது. தாம் கொண்டுசென்ற மடிக்கணணி மற்றும் மோபைல் போனை தாம் அகிலன் வீட்டில் இருந்து எடுத்ததாக இவர்கள் தெரிவித்திருப்பது, சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. காரணம் மகேந்திரராஜா அந்தோணிப்பிள்ளை கொல்லப்பட்ட சமயம் அவர் பெறுமதி மிக்க நகைகளை அணிந்திருந்தார். மற்றும் அவர் தங்கியிருந்த இடத்தில் பணமும் இருந்தது. ஆனால் இவை களவாடப்படவில்லையே !

பொலிசார் கூறுவதுபோல பணத்துக்காக கொலை நடைபெற்றிருந்தால், அகிலன் ஏன் லாப்-டொப்பை மட்டும் எடுத்துச் செல்லவேண்டும் என்ற கேள்விகளும் எழுகின்றன அல்லவா ?
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013) 
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)