web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

இந்திரா காந்தியின் கொலையை உதாரணம் காட்டிய பிரபாகரனின் தோழர்கள் !

[ வெள்ளிக்கிழமை, 22 யூன், 2012, ]
இந்திரா காந்தியின் கொலையை
நீண்ட பாதையின் ஊடான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களிலும்,பேரணிகளிலும் போராட்டங்களிலும் ஒன்றை கவனிக்க கிடைக்கிறது.நடை சோர்ந்து களைப்புமிகும்போதெல்லாம் அந்த மனிதனின் பெயரை யாரோ ஒருவர் ஒரு தூரத்து மலையின் எதிரொலி போல ஓங்கி ஒலிக்கும்போது எங்கிருந்துதான் உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொள்கிறதோ,அப்படி ஒரு உறுதியும் பெரும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடும். அண்மையில் கூட லண்டனில் மகிந்தர் பொதுநலவாயநாடுகளின் பொருளாதாரபேரவையில் உரையாற்றுவதை தடுப்பதற்கான பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் இதனையே பலதடவை பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. எங்கள் தலைவன் என்று ஒரு குரல் தொடங்கியதும் 'பிரபாகரன்' என்று அனைத்து குரல்களும் எந்தவொரு பிசிறும் இன்றி சொல்வது வெறும் கோசமாகவும் கூட்டத்தில் கூவுதலுமாக தெரியவில்லை.அவர்களின் மனஆழங்களில் இருந்து இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பீறிடும் ஒரு சத்தியத்தின் குரலாகவே தெரிகிறது.

ஆம்,அந்த மனிதனின் பெயரே சோர்வை விலத்திஎறிந்து விடுதலைக்கான உரத்தையும் உறுதியையும் தரும் மந்திரசொல்லாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது.எப்படி எமது தேசியக்கொடி எமது தேசியத்தின் அடையாளமாகவும் எழுச்சியின் சின்னமாகவும் ஏந்தி பிடிக்கப்படுகிறதோ அதனை போலவே அந்த மனிதனின் பெயரும் அவரும் உருவமும்தமிழினத்தின் உரிமைகளுக்கான எழுகையின் ஒரே குறிச்சொல்லாக விளங்குவதை பார்க்கமுடிகிறது. இன்றும் என்றும் விடுதலைக்கான எழுச்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒற்றை சொல் அந்த 'பிரபாகரன்' என்பதே.இந்த வார்த்தைக்குள் எப்படி இப்படியான ஒரு மந்திரசக்தி புகுந்துகொண்டது. ஒரு முழு இனத்தினதும் இயங்குதிசையை இன்றும் தீர்மானிக்கும் ஒற்றை சொல்லாக பிரபாகரன் என்ற பெயர் இருக்கின்றது என்றால் அது வெறும் ஒரு இரவுக்குள் அவர் உருவானது அல்ல. நீண்டதும் மிக கடினமானதும் வலிகள் நிறைந்ததுமான அவரின் போராட்ட வரலாற்றினுள் இருந்தே அது முகிழ்ந்தது.

அவரது வாழ்வு முழுதும் இதற்கான உதாரணங்கள் கோடி கோடியாக குவிந்து கிடக்கின்றன.அதில் ஒன்றை இந்த வாரம் பகிர்ந்துகொள்ளலாம்.முள்ளிவாய்க்காலுக்கு பின்பான இன்றைய நிலையில் ஒவ்வொருவரிடமும் அடுத்தவர் மீது சொல்லிக்கொள்ள முடியாத பல சந்தேகங்களும்,பயங்களும் நிறைந்ததாகவே தமிழர் அரசியல்வெளி இருக்கிறது. எமது விடுதலைப்போராட்டத்தை எதிரி சிதைத்ததை விட இதுவே அவனது பெரிய வெற்றியாக கருதலாம். ஆம்,எல்லோருக்குள்ளும் சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் விதைத்திருக்கிறானே அதுவே எதிரியின் பெரும் வெற்றி. இதனை எப்படி உடைத்தெறிந்து எமது இனம் முன் நகர போகிறது என்பதுதான் இன்றைய காலகட்டத்தின் கேள்வி ஆகும்.இதனை உடைத்தெறியாமல் ஒரு அங்குலம்கூட விடுதலைப்போராட்டத்தை முன் நகர்த்த முடியாது என்பதும் மிகப்பெரும் உண்மையாகும்.ஆனால் இதற்கான தெளிவான பதிலை தேசியதலைவர் இருபத்துஎட்டு வருடங்களுக்கு முன்னரேயே கூறி இருப்பதை புரிந்துகொண்டால் நாம் பார்க்கும் எல்லோரையும் நம்பிக்கையீனமாகவும் சந்தேகமாகவும் நோக்குவது சரியா தவறா என்பது விளங்கும்.

1984ம்ஆண்டு அது. 83 இனக்கலவரத்தின் பின் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழர் எழுச்சியின் விளைவாக பயிற்சிக்களங்கள் அங்கு உருவாக்கப்பட்டு வீரர்கள் உருவாக்கப்பட்ட பொழுது அதுதேசியதலைவரின் இருப்பிடம் சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைந்திருந்தது.அமைப்பின் கட்டமைப்புகள் ஒவ்வொன்றும் உருவாக்கப்பட்டு அதில் புதிய வீரர்கள் இணைக்கப்பட்டு கொண்டிருந்த காலமும் அதுதான்.அதுவரை காலமும் தலைவருடன் ஒன்றாக அலைந்து திரிந்து அமைப்பை வளர்த்த மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டமைப்பின் பொறுப்பாளர்களாக மாறி விட்டிருந்த பொழுது அது.தலைவருக்கு என்று அதுவரை மெய்ப்பாதுகாவலர்களாக இருந்தவர்களுக்கும் இயக்க வளர்ச்சியில் வேறு வேலைகள் வழங்கப்பட்டு விட்டிருந்தன.தலைவருக்கு என்று ஒரு புதியபாதுகாப்பு அணி,மெய்பாதுகாவல் அணியாக உருவாக்கப்பட்டது அப்போது. 83ம்ஆண்டுக்கு பின்னர் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்ற வீரர்களில் திறமையான, நம்பிக்கையான வீரர்கள் முப்பது பேரளவில் அந்த மெய்ப்பாதுகாப்பு அணியில் இணைக்கப்பட்டார்கள்.(பின்னர் மிகப்பெரிய தளபதியாக விளங்கிய பிரிகேடியர் சொர்ணமும் அதில் ஒருவர்)தலைவரின் வீட்டை எந்த நேரமும் இரவு பகலாக பாதுகாத்து தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இவர்களின் வேலை.

தலைவரின் வீட்டுக்குள் எந்தநேரமும் துப்பாக்கியுடன் திரிவதற்கு இவர்களுக்கு அனுமதியும் உரிமையும் கொடுக்கப்பட்டிருந்தது.இந்த நேரத்தில் தலைவரை சந்திப்பதற்காக அவரின் ஆரம்பகால நண்பர்கள் வந்திருந்தார்கள். தலைவரை மிக நீண்ட காலமாக அறிந்தவர்கள் அவர்கள். தலைவரின் ஆரம்பகால செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள். அதன் பின் தமது சொந்த வாழ்க்கைக்குள்புகுந்தவர்கள் அவர்கள். தலைவர் மீது அளவு கடந்த நேசமும் பற்றும் பாசமும் கொண்டிருந்தவர்கள் அவர்கள்.தமது நேசத்துக்கு உரிய தம்பி ஒரு பெரும் விடுதலைஅமைப்பின் தலைவனாக ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு வழிகாட்டுபவனாக இருப்பதை பார்க்க அவர்களுக்கு பெரும் மகிழ்வுதான்.ஆனாலும் ஒரு விடயம் மட்டும் அவர்களுக்கு உறுத்தலாகவே இருந்தது.அதனையும் அவர்கள் தலைவருடன் உணவு அருந்தும் பொழுதில் சொல்லி விட்டார்கள்.'தம்பி,முதல் என்றால் உன்னுடன் எப்போதும் சீலன் அல்லது சங்கர் அல்லது கிட்டு அதுவும் இல்லை என்றால் லாலா,புலேந்திரன்தான் பாதுகாப்பாக நிற்பார்கள்.

இப்போது பார்,உன் வீட்டுக்குள் யார் யாரோ புதிய பொடியள் எல்லாம் பிஸ்டல்,ரைபிள்களுடன் நிற்கிறான்கள்.கவனம் தம்பி.யாரையும் நம்பமுடியாது' என்று தலைவருக்கு சொன்னார்கள். அப்போது தலைவர் தனக்கே உரித்தான முன்வலுடன்'பின்னுக்கு நிற்கிறவன் சுடுவான் என்று பயந்து கொண்டிருந்தால்,முன்னுக்கு ஒரு வேலையும் என்னாலை செய்ய ஏலாது.சாவு வரும் என்று பயந்து கொண்டே போராட்த்தில் நிற்க முடியாது.விடுதலைப்போராட்டம் என்றால் நம்பிக்கையும் முக்கியம்.அதே நேரம் விழிப்புணர்வும் முக்கியம்' என்று சொன்னார்.இவை வெறும் வசனங்கள் அல்ல.இவை ஒரு கதையாடலில் அவர் சொன்ன பதில் மட்டும் அல்ல.இன்றைய குழப்பமான காலகட்டத்தில் அனைவரும் உணர வேண்டிய வார்த்தைகள் அவை. தேசியவிடுதலைப்போராட்த்தில் அருகில் நிற்பவன் ஏதும் செய்வான் அச்சத்துடனேயே பயணிக்க முடியாது.இந்த கதையாடல் முடிந்து ஒரிரு மாதங்களில் இந்திராகாந்தி தனது பாதுகாப்பு அதிகாரிகளாலேயே தனது சொந்த இல்லத்துள் வைத்து சுட்டு கொல்லப்படுகிறார்.அது நடந்தஇரண்டு நாட்களில் முன்னர் தலைவரை சந்தித்த அவரது நண்பர்கள் மீண்டும் வருகிறார்கள்.

'பார்த்தியா,அந்த பெரிய தலைவியையே மெய்ப்பாதுகாப்பு வீரர்கள் சுட்டுவிட்டார்கள்.கவனம் தம்பி'தலைவருக்கு மீண்டும் சொல்லுகிறார்கள்.இந்த முறையும் தலைவர் அதே தெளிவுடனும் உறுதியுடனும் சொல்லுகிறார்.'விடுதலைப்போராட்டம் என்றால் நம்பிக்கை முக்கியம்''அதே நேரம் விழிப்புணர்வும் முக்கியம்'நம்பிக்கையோடு இணைவோம்.அதே நேரம் விழிப்புணர்வுடன் இருப்போம்.

நன்றி:
ச.ச.முத்து
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
Published news:
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)