![]() |
விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியைத் தேடும் சிறிலங்கா புலனாய்வுத்துறை | ||
| [ வெள்ளிக்கிழமை, 22 யூன், 2012, ] | ||
இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட மக்கள் படையணியான எல்லைப் படையில் இருந்தவர்களை குறி வைத்து அவர்களின் விவரங்களை படைப் புலனாய்வாளர்கள் திரட்டத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக வவுனியா வடக்கிலுள்ள பல கிராமங்களில் படைப் புலனாய்வாளர்கள் இத்தகைய முன்னாள் எல்லைப் படையினரின் தகவல்களைத் திரட்டி வருவதால் மக்களிடையே அச்ச நிலை உருவாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் எல்லைப் படை என்ற மக்கள் படையணியை உருவாக்கி இருந்தனர். ஆழ ஊடுருவும் படையணியின் தாக்குதல்களில் இருந்து மக்களை காத்தல் , காயப்பட்ட மக்களை மருத்துவ மனைகளுக்கு கொண்டு செல்லல், குண்டு வீச்சுகளில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு பொது இடங்களில் பதுங்கு குழிகளை அமைத்தல் என்பன போன்ற பணிகளில் இந்த எல்லைப் படையினர் ஈடுபட்டிருந்தனர். எல்லைப் படையினர் நேரடியாக போர்களில் ஈடுபட்டது கிடையாது. தற்போது உள்ள விழிப்புக்குழுக்களின் செயற்பாடுகளை ஒத்ததாகவே எல்லைப் படையினரின் நடவடிக்கைகளும் இருந்தன. அப்பாவி மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளில் இருந்து அவர்களாகவே மீள்வதற்காகவே இந்த எல்லைப் படை உருவாக்கப்பட்டிருந்தது. இவர்களில் அநேகருக்கு ஆயுதப் பயிற்சிகள் கூட வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் முன்னாள் எல்லைப் படையினரின் விவரங்களை படைத்தரப்பினர் துருவித் துருவி அறிந்து வருகின்றனர். வவுனியா வடக்கில் உள்ள பட்டிக் குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், கீரிசுட்டான், பட்டறைப் பிரிந்த குளம், மருதோடை ஆகிய கிராமங்களில் படைப் புலனாய்வாளர்கள் இவ்வாறு எல்லைப் படையினரின் விவரங்களைத் திரட்டி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. போர் முடிவடைந்து, முன்னாள் போராளிகள் கூட புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்,மக்கள் நலன் சார் அமைப்பொன்றில் இருந்தமைக்காக எல்லைப் படையினரின் விவரங்களை ஏன் இப்போது புலனாய்வாளர்கள் திரட்டுகின்றார்கள்? என்பது புரியாமல் மக்கள் குழப்பத்திலும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு ! (19/05/2013)
|
பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு! (19/05/2013)
|
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
|
Published news: |
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|


யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !









