web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

உடல் வலிமை தரும் உடற்பயிற்சி

[ சனிக்கிழமை, 30 யூன், 2012, ]
உடல் வலிமை தரும் உடற்பயிற்சி
இன்றைய கணினி உலகில் யாருக்கு உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கிறது? ஆனால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்
அல்லவா! இதோ உடல்வலியை போக்கி வலிமை தரும் ஒரு சிறிய உடற்பயிற்சி.
இரண்டு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு, பார்வையை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கவும். தரையில் உள்ள ஒரு இரும்புப் பட்டையைத் தூக்குவதுபோல கற்பனை செய்துகொள்ளவும்.

இப்போது அதைச் செய்வதற்கு முன்பாக, மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு, மெதுவாக முன்புறமாக வளைந்து இரு உள்ளங்கைகளும் தரையில் படுமாறு செய்யவும். இப்போது, மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு, வாயைத் திறந்து ஆ….ஹ்! என்று சத்தமாகச் சொல்லவும்.

உங்களால் முடிந்தவரை சத்தமாகச் சொல்லவும். இந்தப் பயிற்சியானது உங்களின் முக இறுக்கத்தைக் குறைத்து, முகத்தசைகளுக்கு ஓய்வு அளிக்கின்றது. பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிய பிறகு, நேராகவும் நிமிர்ந்தும் நின்றுகொண்டு, முதுகை லேசாக பின்புறம் வளைத்து, கைகளை தலைக்கு மேலே தூக்கி, கண்களை மேல்நோக்கிப் பார்த்து, மார்பை நன்றாக விரித்து, விரல்களைத் திறக்கவும்.
இதுவே ஒரு முழுப்பயிற்சி. சிறந்த பய‌னை‌ப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு 10 முறை இவ்வாறு செய்யவும். இவ்வாறு இந்த பயிற்சியை செய்வதால் உடலில் உள்ள அனைத்து வலிகளும் பறந்துபோகும்.
மேலும் இந்த பயிற்சி கால்கள், முதுகு, தோ‌‌ள்பட்டை மற்றும் கைகளில் உள்ள விறைப்புத் தன்மை மற்றும் வலியைப் போக்குகிறது. உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி, முதுகெலும்பு மிருதுவாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்கிறது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் நிர்வாணமாக குளித்த இரு இளம் பெண்கள் கைது!  (19/06/2013) 
  உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பு வசமுள்ள திருமலை நகர சபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம்  (19/06/2013) 
  இரண்டாக பிளந்த குழந்தையின் ஆண் உறுப்பு -சத்திரசிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு சாதனை  (19/06/2013) 
  கொழும்பு பல்கலை கட்டிடத்திலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழப்பு  (18/06/2013) 
  13 ஆவது திருத்தச் சட்டத்தில் எவ்விதமான திருத்தமும் செய்யவேண்டியதில்லை: எதிர்க்கட்சிகளின் கூட்டு  (17/06/2013) 
  இலங்கைக் கடறப்பரப்பிற்கு அண்மைய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்  (17/06/2013) 
Published news:
  மாணவர்களின் தாய்மாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்தி பணம் சம்பாதித்து வந்த ஆசிரியர் கைது  (13/06/2013)
  பாரிய குற்றச் செயல்களுடன் மற்றுமொரு பொலிஸ்மா அதிபர்: நெருக்கடியில் மஹிந்த!  (13/06/2013)
  இலங்கை மீதான அடுத்த நடவடிக்கை என்ன?- உன்னிப்பாக அவதானிக்கிறது அமெரிக்கா!  (12/06/2013)
  சிறிலங்கா எதிர்கொள்ள நேரிடும் அடுத்தகட்ட தாக்குதல்!  (12/06/2013)
  இந்திய ராணுத் துறையை சிங்கள அரசே இயக்குகிறதா? அல்லது ஏமாற்றுகிறீரா?   (10/06/2013)
  சிறிலங்காவில் கொலையாளியாக மாறும் காவல்துறை!  (10/06/2013)