![]() |
20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை! | ||
| [ வியாழக்கிழமை, 05 யூலை, 2012, ] | ||
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசான். விவசாயி. இவரது மகள் லதா வயது 20 பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இவருக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து ஊரைச் சேர்ந்த ஆனந்த் குர்மி என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.
திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணம், நகைகளை ராம்கிசான் கொடுத்தார். திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு லதாவை அவரது கணவரும், குடும்பத்தாரும் சித்ரவதை செய்ய தொடங்கினர். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினர். கட்டாயப்படுத்தி கர்ப்பத்தையும் கலைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரதட்சணை கொடுமை உச்சகட்டத்தை எட்டியது. லதாவை ஆடு, மாடுகளுடன் அடைத்து வைத்தனர்.
கணவர், மாமனார், கணவரின் சகோதரர்கள், மற்றும் உறவினர் வீட்டு ஆண்கள் என பலர் லதாவை 3 ஆண்டுகளாக கற்பழித்தனர். பல நேரங்களில் உணவு கொடுக்காமல் பட்டினி போட்டனர். ஒரே நாளில் இரண்டு, மூன்று பேர் லதாவை கற்பழித்தனர்.
இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு லதா பக்கத்து ஊரைச் சேர்ந்த பணக்காரர் ஒருவருக்கு ரூ. 50,000- க்கு விற்கப்பட்டார். இதுபற்றி லதாவின் தந்தை ராம்கிசான் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசாரும், ஒரு தொண்டு நிறுவனத்தினரும் லதாவை பணக்காரரிடம் இருந்து மீட்டனர். லதாவின் கணவர் ஆனந்த் குர்மி அவரது உறவினர்கள் 9 பேர் மீது கற்பழிப்பு மற்றும் வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி! (22/05/2013)
|
திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி (24/05/2013)
|
தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு ! (23/05/2013)
|
பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு (23/05/2013)
|
நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை (23/05/2013)
|
செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு (22/05/2013)
|
|
Published news: |
கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்! (18/05/2013)
|
தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது (18/05/2013)
|
ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது (18/05/2013)
|
மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி! (18/05/2013)
|
திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு (17/05/2013)
|
ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு (17/05/2013)
|


மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!









