web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கோத்தபாயவின் சரவெடி, மேற்குலகில் சலசலப்பை ஏற்படுத்துமா?

[ செவ்வாய்க்கிழமை, 10 யூலை, 2012, ]
கோத்தபாயவின் சரவெடி, மேற்கு
இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்டவர்களில் விடுதலைப் புலிகளே அதிகம் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுத் தூதர்களின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கோத்தபாய சரமாரியான பொய்களை அள்ளி வீசியுள்ளார்.

இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட 7,896 பேரில் விடுதலைப் புகலிகளே அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பினரும் தமது நலன்கள் சார்ந்த உள்நோக்கத்தோடு மிகைப்படுத்திக் கூறுவதாக அவர் கருத்து வெளியிட்டார்.

ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு அடங்கலாக சர்வதேச சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

7000 முதல் 40000 வரையில் என அமைந்துள்ள இந்த எண்ணிக்கைகள் சுயாதீனமான ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல் கூறப்பட்டவை என்றும் இதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை அரசுக்கு இருப்பதால் சனத்தொகை கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதாகவும் கோத்தபாய கூறியிருக்கிறார்.

இதேவேளை ஐ.நா ஆணைக்குழுவின் ஆய்வில் 40000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்கள் கொல்லப்பட்டனர் என ஆதாரபூர்வமாக தகவல் வெளியிட்டிருந்தது.

சிறிலங்கா படையினரின் நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த தெளிவான புள்ளிவிபரங்களை கோட்டாபய ராஜபக்ஷ முன்வைக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு   (23/05/2013) 
  கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!  (23/05/2013) 
  பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  (23/05/2013) 
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
Published news:
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013)
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013)
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)