![]() |
நிமலரூபனின் படுகொலை ஜெனிவாவில் மஹிந்த அரசுக்கு மரணப் பொறியாக மாறும்! | ||
| [ செவ்வாய்க்கிழமை, 10 யூலை, 2012, ] | ||
சிறைச்சாலையில் பொலிஸாரினாலும், சிறைச்சாலை அதிகாரிகளினாலும் மிலேச்சத்தனமான முறையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் மரணம் அடுத்த ஜெனிவா மாநாட்டில் மஹிந்த அரசுக்கு மரணப் பொறியாக மாறும் என்று ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நிமலரூபனின் சடலத்தை அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்காமல் இருப்பதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகளுக்குள்ள மதிப்பை இலகுவில் கணிப்பிட்டுக்கொள்ள முடியும் எனவும் அக்கட்சி அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ள தமிழ் அரசியல் கைதி கணேசன் நிமலரூபனின் சடலத்தை அவரின் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு மஹிந்த அரசு மறுத்து வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: "இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை. மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் அவசியம் என ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த வருடம் மஹிந்த அரசு மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் போது அதை சர்வதேசம் ஏற்காது. இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சம்பவங்களே இதற்குப் பிரதான காரணமாகும். சிறைச்சாலையில் பொலிஸாரினாலும், சிறைச்சாலை அதிகாரிகளினாலும் மிலேச்சத்தனமான முறையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் மரணம்கூட அடுத்த ஜெனிவா மாநாட்டில் மஹிந்த அரசுக்கு மரணப் பொறியாக மாற்றம் பெறலாம். இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கு மஹிந்த அரசு பதிலளித்தேயாகவேண்டும். இதிலிருந்து விடுபட முடியாது. இறந்துபோன தனது மகனின் சடலத்தை எடுப்பதற்குக் கூட பெற்றோர் அல்லோலகல்லோலப்படவேண்டிய நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஏகாதிபத்திய ஆட்சியில் கூட இவ்வாறு நடைபெறாது" - என்று தெரிவித்தார் ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
|
Published news: |
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு- (16/05/2013)
|
கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள் (15/05/2013)
|
மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு (15/05/2013)
|
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|


மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!









