![]() |
மீண்டும் அமெரிக்காவின் அழுத்தத்திற்குள் சிக்கும் சிறிலங்கா | ||
| [ புதன்கிழமை, 11 யூலை, 2012, ] | ||
போரின் பின்னரான சிறிலங்காவின் முன்னேற்றங்கள் குறித்து முன் வைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாமை மற்றும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடத்தாமை ஆகியன குறித்து அமெரிக்க அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இந்தியாவும் இந்த விடயம தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியா இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது என இந்திய கூறியிருந்தது. அரசாங்கம், ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாகவும் வட மாகாண தேர்தலை நடத்துவது குறித்தும் வாக்குறுதிகளை அளித்திருந்தது. இந்த நிலையில், வடமாகாணத்திற்கு தேர்தலை நடத்தாது, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு தேர்தலை அறிவித்துள்ளமை குறித்து அமெரிக்க அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்றிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அமெரிக்க இராஜங்க செயலாளரிடம் திட்ட வரைபொன்றை வழங்கியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனினும் சிறிலங்கா அரசாங்கம் அப்படியான எந்தவொரு திட்ட வரைபையும் முன் வைக்கவில்லை என மறுத்திருந்தது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் (17/05/2013)
|
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
|
Published news: |
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|
இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை! (09/05/2013)
|
9 அதிபர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை (09/05/2013)
|


வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!









