web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

திருமணமான ஒரு மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்த மணமகள்

[ சனிக்கிழமை, 14 யூலை, 2012, ]
திருமணமான ஒரு மணி நேரத்தில்
ஏஞ்சர்ஸ்:பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் திருமணமான ஒரு மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்தார். பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ளது ஜலாய்ஸ்நகரம். இந்த நகரத்தை சேர்ந்த காதல் ஜோடி ஒன்று குழந்தை பெறுவதற்கு முன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

காதலி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஜூலை மாதம் 14ம் தேதி குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் நாள் குறித்திருந்தனர். எனவே, முன்னதாகவே திருமணத்தை முடிக்க திட்டமிட்டு, கடந்த 8ம் தேதி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ திருமணம் இனிதே நிறைவேறியது.

வந்த உறவினர்களுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த மணமகளுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் வருவதற்குள் திருமணக்கூடத்திலேயே மணப்பெண், ஆண் குழந்தையை பெற்றெடுத்து விட்டார்.

மங்கள கோஷத்துக்கு பதில் பிறந்த குழந்தையின் கோஷம் தான் அதிகம் கேட்டது.வந்த உறவினர்கள், மணமக்களுடன் குழந்தையையும் வாழ்த்தி விட்டு சென்றனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான்  (19/05/2013) 
  தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன்  (19/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013) 
Published news:
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013)
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013)
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)
  ஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு  (07/05/2013)