![]() |
தமிழ் ஊடக நிறுவனங்களை எச்சரிக்கும் புலனாய்வுத்துறை - நாலாம் மாடியில் விசாரணை | ||
| [ வெள்ளிக்கிழமை, 20 யூலை, 2012, ] | ||
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தாயகத்தின் கள யதார்த்தத்தை வெளியிட்டுவரும் இணைய ஊடகங்களுக்கு அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையில், உள்ளூர் ஊடகங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு அச்சுறுத்தி வருகின்றது.
கடந்த 11ம் திகதி யாழிலிருந்து வெளியாகும், உதயன் பத்திரிகையின் ஆசிரியர் குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தது. இதேபோன்று வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விஜயசுந்தரமும் கொழும்பு நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசேட குற்றப்புலனாய்வுத் துறையினரால் பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். இதன்போது இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளை எடுத்து பிரசுரித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகளை பிரசுரித்தல் தொடர்பாக கேள்வியெழுப்பபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இவ்வாறான விசாரணைகளின் மூலம் அரசாங்கம், ஊடகங்களின் வாயை நிரந்தமாக மூடுவதற்கு முயற்சித்து வருகின்றமை புலனாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தேசிய மட்டத்தில் வெளியாகும் தினக்குரல் பத்திரிகையின் யாழ். பதிப்பில் வெளியாகும் அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் தொடர்பாக கொழும்பிலுள்ள அந்த பத்திரிகையின் தலைமையத்துடன் அரசாங்கம் முறைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு ! (19/05/2013)
|
பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு! (19/05/2013)
|
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
|
Published news: |
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|


யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !









