web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

அகதிகளின் படகால் அவுஸ்ரேலியா - இலங்கை அரசுகளிடையே உக்கிர சமர்!

[ சனிக்கிழமை, 21 யூலை, 2012, ]
அகதிகளின் படகால் அவுஸ்ரேலியா
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் படையெடுப்பதை தடுக்கவில்லை என்று இருநாடுகளும் மாறிமாறி குற்றம்சாட்டி வருவதால் இருதரப்புக்கும் இடையில் உக்கிர மோதல் போக்கு உருவாகியுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கு ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதில் இலங்கை கடற்படை தோல்வியடைந்துள்ளதாக சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் றொபின் முடிஇ சிறிலங்கா கடற்படைத் தளபதியை சந்தித்து குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த புதன்கிழமை இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற அவசரசந்திப்பு ஒன்றிலேயேஇ சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவிடம்இ அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அத்துடன் படகுகளில் அகதிகள் அவுஸ்ரேலியா செல்வதை இலங்கை கடற்படை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில்இ கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில்இ தமது நடவடிக்கைக்கு அவுஸ்ரேலியா ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி குற்றம்சாட்டியுள்ளார்.

“2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் சிறுவர்களை ஏற்றிச் சென்ற இழுவைப்படகுகளை தடுத்து வைத்துள்ளோம்.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 400 பேர் தடுக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படைப் புலனாய்வுப் பிரிவும் அதன் சகோதர புலனாய்வு அமைப்புகளும் ஆட்கடத்தல்களை முறியடிக்க மேலதிகமாக பணியாற்றுகின்றன.

ஆனால் துரதிஸ்டவசமாகஇ எமது முயற்சிகளுக்கு அவுஸ்ரேலியா ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

நிலைமைகளை அவுஸ்ரேலிய தூதுவருக்கு விளக்கியுள்ளேன்.

இலங்கை கடற்படைக்கு பின்னால் அவுஸ்ரேலியா இருக்கத் தவறியுள்ளது.

பொருளாதார அகதிகளைக் கவரும் முதன்மையான தெரிவாக அவுஸ்ரேலியா இன்னமும் இருந்தது வருகிறது. அவர்களின் சட்டங்கள் அதற்கு இடமளிக்கின்றன.

ஒரு படகில் சென்ற பொய்யான அகதிகளை அவுஸ்ரேலியா திருப்பி அனுப்புமேயானால் ஒரே இரவில் நிலைமைகள் மாறும்.

எமது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ அடைக்கலம் தேடியவர்களின் விபரங்களைத் தரவோ அவுஸ்ரேலியா தயாராக இல்லை.

தமது காவலில் உள்ள சிறிலங்கா படகுகளின் விபரங்களையும் வெளியிட மறுக்கிறது. சிறிலங்காவுக்கு அப்பால் 200 கடல்மைல் தொலைவில் இழுவைப்படகு ஒன்று தத்தளித்துக் கொண்டிருப்பதாக அண்மையில் அவுஸ்ரேலியத் தூதுவர் எனக்குத் தகவல் தந்தார்.

அதனை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிய அவர் சரியான இடத்தை கூறவில்லை.“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு   (23/05/2013) 
  கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!  (23/05/2013) 
  பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை  (23/05/2013) 
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
Published news:
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013)
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013)
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013)
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013)
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)