web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

புதிய மின்னஞ்சல்கள் வந்துள்ளதை SMS Alertஆக பெறுவதற்கு

[ புதன்கிழமை, 01 ஓகஸ்ட், 2012, ]
புதிய மின்னஞ்சல்கள் வந்துள்ள
ஏதாவது முக்கியமான மின்னஞ்சல் வந்து அதை நாம் படிக்காமல் இருந்தால், அவ்வப்போது சிறு பிரச்னை ஏற்படும்.

இதனை தவிர்க்க நமக்கு வரும் மின்னஞ்சலை SMS மூலம் அறியலாம்.

1. இதற்கு முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள்.

2. ஏற்கனவே கணக்கு இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய கணக்கு ஒன்றை தொடங்கவும்.

3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பின் தோன்றும் விண்டோவில் உள்ள Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும்.

இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து, முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும்.

6. இப்போது உங்கள் Mobile க்கு ஒரு SMS வரும். அதில் Confirmation Code இருக்கும். இல்லை என்றால் Way2sms-இல் Mail Alert பகுதியில் Inbox 123456@way2sms.com என்பதை கிளிக் செய்தால் வரும்.

எதுவும் வரவில்லை என்றால் ஜிமெயிலில் Resend email என்பதை கிளிக் செய்யவும்.

7. இப்போது நீங்கள் பெற்ற Code-ஐ ஜிமெயிலில் Forwarding and POP/IMAP பகுதியில் தர வேண்டும். அதன்பின் Forward -- என்று உள்ளதை கிளிக் செய்யவும்.

அவ்வளவு தான் இனி புதிய மின்னஞ்சல்கள் உங்களுக்கு மொபைலில் Alert ஆக வந்து விடும். யாரிடம் இருந்து மின்னஞ்சல் மற்றும் Subject போன்றவை அதில் வரும்.

குறிப்பு: Yahoo-வில் இதை நீங்கள் இலவசமாக செய்ய முடியாது. Hotmail-இல் Options பகுதியில் இதை செய்யலாம். மற்றவற்றுக்கு Settings பகுதியில் Forwarding வசதி இருப்பின் செய்ய முடியும்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து