web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

எதிரான விளைவுகளை சந்திக்க நேரிடும் - சிறிலங்காவை எச்சரிக்கும் இந்தியா

[ திங்கட்கிழமை, 06 ஓகஸ்ட், 2012, ]
எதிரான விளைவுகளை சந்திக்க
சிறிலங்கா, தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை விரைவில் தீர்க்கா விட்டால், ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் எதிரான நிலை ஏற்படும் என இந்தியா எச்சரித்துள்ளது.

வடமாகாண தமிழர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர், அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்றால், மனித உரிமைகள் தொடர்பான ஜெனிவா மாநாட்டில் விருப்பமின்றியேனும், சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட நேரிடும் என இந்திய அரசாங்கம் அந்நாட்டு அரசு தகவல் அனுப்பியுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன மாத்திரம் ஓரளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அரசியல் தீர்வு தொடர்பாக எந்த முன்னேற்றத்தை பெற முடியவில்லை என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது.

எனினும் அடுத்த வருடத்தில் வடமாகாணத்திற்கான மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருதார்.

இதனை விரைவுபடுத்தி இந்தியாவின் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க சிறிலங்கா முயற்சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அடுத்த வரும் ஆகஸ்ட் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி, இந்தியாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணியுள்ளது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
Published news:
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)