web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

தமிழர் ஒருவரையே கிழக்கின் முதலமைச்சராக நியமிக்க வேண்டும்!

[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட், 2012, ]
தமிழர் ஒருவரையே கிழக்கின்
முஸ்லிம் அரசியல் அழுத்தங்களை கட்டுப்படுத்த, தமிழர் ஒருவரையே கிழக்கின் முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியுடன் இணைந்திருக்கும் தமிழர் ஒருவரை நியமிப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும்...


முஸ்லிம் அரசியல் அழுத்தங்களை குறைக்க முடியும். அவ்வாறு நியமிக்காவிட்டால் தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஏறாவூர் அல்லது காத்தான்குடிக்கு செல்ல வேண்டிய நிலமை ஏற்படும். “தயட்ட கிருல” கண்காட்சி மற்றும் அபிவிருத்தித் திட்டத்திற்காக பாரியளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இந்த நிதி ஒதுக்கீடு மூலம் பிரதேசத்தில் அபிவிருத்தி ஏற்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 சதவீதமான முஸ்லிம்களே வாழ்கின்றனர். எனினும் அவர்கள் அரசியல் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். எதிர்க்கட்சியில் இருக்கும் எமது தமிழ் உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கோசங்களை எழுப்புவதனைத் தவிர வேறு எதனையும் செய்வதில்லை.



வாக்களித்த எமக்கு என்ன செய்திருக்கின்றீர்கள் என நாடளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் சுயகௌரவத்தை பேணிப் பாதுகாக்கவுமே நான் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டேன். இதன் மூலம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வரும் எமது தமிழ் சமூகத்தை பாதுகாக்க முடிந்தது.



தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து ஆளும் கட்சி தமிழ் வேட்பாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விநாயகமூர்த்தி முரளிதரன் கோரியுள்ளார். சித்தாண்டி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!  (18/05/2013) 
  தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி  (18/05/2013) 
  விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை   (17/05/2013) 
  பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்!   (17/05/2013) 
  ‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்  (17/05/2013) 
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013) 
Published news:
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)
  யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில்  (09/05/2013)
  இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை!   (09/05/2013)
  9 அதிபர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை   (09/05/2013)